பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

virtual drive

1539

virtual memory



virtual drive : மெய்நிகர் வட்டகம் : ரேம் வட்டகம் என்றும் கூறப்படும். வட்டு இயக்கி யைப் போன்று நினைவகத்தின் ஒரு பகுதி பயன்படுத்தப்படும். வட்டைவிட நினைவகத்திலிருந்து கணினி வேகமாகப் படிக்க முடியும் என்பதால் மெய்நிகர் வட்டகங்கள் வேகமானவை . இருப்பினும், கணினியை நிறுத்தினாலோ அல்லது மீண்டும் துவக்கினாலோ ரேம் வட்டகத்தில் உள்ள தரவு மறைந்து போகும்.

virtual execution system : மெய்நிகர் செயற்பாட்டு முறைமை.

virtual library : மெய்நிகர் நூலகம்.

virtual image : மெய்நிகர் படிமம் : கணினி நினைவகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு படிமம். ஆனால், முழுப் படிமத்தையும், அப்படியே முழுமையாக ஒரே திரையில் காண்பிக்க முடியாத அளவுக்குப் பெரியது. இதுவரை பார்க்கவியலாத பகுதிகளை உருட்டி, விரித்துப் பார்வைக்குக் கொண்டுவர முடியும்.

virtual-image file : மெய்நிகர்-படிமக் கோப்பு : ஒரு குறு வட்டில் (CD-ROM) பதியவிருக்கின்ற தரவுகளைக் குறிக்கும் ஒரு கோப்பு. குறுவட்டில் பதியவிருக்கின்ற அனைத்துக் கோப்பு களும் ஓரிடத்தில் திரட்டப்படுவதற்குப் பதிலாக, அக்கோப்புகளுக்கான சுட்டுகள் (pointers) மெய்நிகர்-படிமக் கோப்பில் இடம் பெற்றிருக்கும். பதியப் பட வேண்டிய கோப்புகள் நிலைவட்டில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கலாம்.

virtual home for the holidays : விடுமுறைக் காலத்து மெய்நிகர் இல்லம்.

virtualize : மாயப் படுத்து, மெய் நிகராக்கு : மெய்நிகர் நினைவகத்தில் நிரல் தொடரை இயங்க வைத்தல்.

virtual LAN : மெய்நிகர் லேன் : வழங்கன் கணினிகளின் பல்வேறு குழுக்கள் ஒருகிணைக்கப்பட்ட ஒரு குறும்பரப்புப் பிணையம் (LAN). இவை வெவ்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டவை. என்றாலும் அவை ஒரே லேனில் இணைக்கப்பட்டவைபோலவே தகவல் பரி மாற்றம் செய்து கொள்கின்றன.

virtual machine : தோற்றநிலை எந்திரம்; மெய்நிகர் எந்திரம் : ஒரே சமயத்தில் ஓடும் தற்போதையக் கணினியின் பல படிகள் உள்ளதாகத் தோன்றும் பொய்த் தோற்றம்.

virtual memory : மெய்நிகர் நினைவகம்.