பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1544

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

virtual storsge

1543

virus


விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற மெய்நிகர் வழங்கன்களை வழங்குகின்றனர்க.

virtuai storage : தோற்றநிலைச் சேமிப்பு : மெய்நிகர் சேமிப்பு : ஒரு குறிப்பிட்ட அளவு உள்முகச் சேமிப்பையும், சற்று அதிக அளவு குறைந்தவேகச் சேமிப்பியிலிருந்து உள்முகச் சேமிப்பிக்கு மாற்ற உதவுகிறது.

virtual storage operating system : மெய்நிகர்நிலைச் சேமிப்புச் செயற்பாட்டுப் பொறியமைவு : ஒரு கணினிப் பொறியமைவின் தோற்றநிலைச் சேமிப்புத்திறனைப் பயன்படுத்தும் செயற்பாட்டுப் பொறியமைவு.

virtual storefront : மெய்நிகர் அங்காடி : இணையத்தில் ஒரு நிறுவனத்தின் இருப்பு. நிகழ் நிலை விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தளம்.

virtual terminal : மெய்நிகர் முனையம் : அந்நிய கணினியை அணுக அனுமதிக்கும் முனை யத்தின் முயற்சி. சிறுகதை அல்லது பெருமுகக் கணினியை பீசி மூலம் அணுகுவதைக் குறிப் பிடுகிறது.

virtual troolfair : மெய்நிகர் கண்காட்சி.

virtual university : மெய்நிகர் பல்கலைக் கழகம்.

virtual world : மெய்நிகர் உலகம். முப்பரிமான மாதிரியங்கள் கொண்ட சூழல். வீஆர்எம்எல் (VRML - Virtual Reality Modelling Language) மொழியில் வாக்கப்பட்டது. பயனாளர் அதில் தோற்றமளிக்கும் பொருள்களோடு, நடப்புலகப் பொருள்களைப் போன்றே ஊடாட முடியும்.

virus : வைரஸ்;நச்சு நிரல் : இயக்க அமைப்பு மற்றும் தரவுக் கோப்புகளின் ஒற்றுமையைப் பாதிக்கும் மென்பொருள். நிரல் தொடர் எந்திரத்தின் இயக்கத்தைத் தடுக்கவோ அல்லது தரவுகளை அழிக்கவோ இது முயற்சிக்கும். நச்சுநிரல் நிரல் தொடர்களைக் கண்டுபிடித்தவர் யார் என்பது தெரியவில்லையென்றாலும் உலகின் பல நாடுகளில் இது துவங்கியது. நச்சு நிரல்கள் தங்களைப் பெருக்கிக்கொள்ளக் கூடியவை. ஒரு நிறுவனத்தின் கணினி அமைப்பு முழுவதும் வேகமாகப் பரவும். நச்சு நிரலால் பாதிக்கப்பட்ட ஒரு வட்டை வேறொரு கணினியில் பயன்படுத்துவது போன்று வேண்டுமென்றே நச்சு நிரல் சேர்க்கலாம். நல்லவேளையாக நச்சுநிரல் தடுப்பு மென்பொருள்