பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

visual J++

1546

VL bus


Visual J++ : விசுவல் ஜே++ : மைக்ரோ சாஃப்டின் காட்சி அடிப்படையிலான ஜாவா நிரலாக்கப் பணிச்சூழல். ஜாவா மொழியில் பயன்பாடுகளையும் குறுநிரல்களையும் உருவாக்கப் பயன்படுகிறது. மைக்ரோசாஃப்ட் விசுவல்ஸ்டுடியோ வின் ஓர் அங்கம்.

visual page : காட்சிப் பக்கம்;காணும் பக்கம் : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேமித்து வைக்கப்பட்ட திரைக்காட்சிக் கோப்புகள் அடங்கிய காட்சி உருவரை.

visual programming : காட்சிநிலை நிரலாக்கம் : நீண்ட கட்டளைத் தொகுதிகளை எழுதிச் செல்வதற்குப் பதில், பட்டித்தேர்வுகள், பொத்தான்கள், சின்னங்கள் மற்றும் பிற முன்வரையறுக்கப்பட்ட வழிமுறைகளிலிருந்து அடிப்படை நிரலாக்கப் பொருள்கூறுகளைத் தேர்வுசெய்து பயன்பாடுகளை உருவாக்க வகைசெய்யும் ஒரு நிரலாக்க வழிமுறை.

visual scanner : காட்சி வருடி.

visual symbols : காட்சிக் குறியீடுகள்.

visual table of contents : காணும் உள்ளடக்கப் பட்டியல் : ஒரு நிறுவனத்துக்கு உள்ளேயோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிரல் தொடரிலோ தரவு ஓட்டத்தின் விளக்கங்களை வரைகலை வடிவில் காட்டும் ஒரு வரைபடம். வரைபடத்தின் மேற்பகுதியில் காட்டுவதைவிட அடிப்பகுதியில் அதிகமான தரவுகள் காட்டப்படும். VTC என்று சுருக்கப்படும்.

VL bus : விஎல் பாட்டை : வேசா (VESA) உள்ளமை பாட்டை என்பதன் சுருக்கம். வீடியோ எலெக்ட்ரானிக்ஸ் ஸ்டேண்டர்டு அசோஷி யேஷன் நிறுவனம் அறிமுகப்படுத்திய உள்ளமை பாட்டைக் கட்டுமானத்தில் ஒருவகை. இதன்படி ஒரு பீசி தாய்ப் பலகையில் மூன்று விஎல் பாட்டை செருகுவாய்களை வைத்துக்கொள்ளமுடியும். சி. பீ. யு-வின் துணையின்றி நுண்ணறிவுத் தகவி அட்டைகள் தாமே சில செயல்பாடுகளை நிறைவேற்றும், பஸ் மாஸ்டரிங் இதில் இயலும். ஒரு விஎல் பாட்டைச் செருகுவாய் வழக்கமான இணைப்பியுடன் கூடுதலாக 16-பிட் நுண்தடக் கட்டு மான இணைப்பியைக் (Micro Channel Architecture Connector) கொண்டிருக்கும். ஆனால், தயாரிப்பாளரே இதனைத் தாய்ப்பலகையில் உள்ளிணைத்