பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VLF radiation

1547

voder


திருக்க வேண்டும். வழக்கமான இணைப்பிகளை விஎல் பாட்டைச் செருகுவாய்களாகப் பயன்படுத்த முடியாது. விஎல் பாட்டைத் தகவி அல்லாத அட்டையை ஒரு விஎல் பாட்டைச் செருகுவாயில் பயன்படுத்த முடியும். ஆனால் அது உள்ளமை பாட்டையைப் பபயன்படுத்த முடியாது. எனவே ஒரு சாதாரண பாட்டைச் செருகு வாய் போலவேதான் செயல்படும்.

VLF radiation : விஎல்எஃப் கதிர்வீச்சு : மிகக் குறைந்த அலை வரிசைக் கதிர்வீச்சு (Very-low Frequency Radiation) என்பதன் சுருக்கம். ஏறத்தாழ 300 ஹெர்ட்ஸ் முதல் 30 கிலோ ஹெர்ட்ஸ் வரம்பெல்லைக்குள் உள்ள அலை வரிசைகளில் நிகழும் மின்காந்தக் கதிர்வீச்சு. வானலைக் கதிர்வீச்சு என்றும் கூறுவர். கணினித் திரையகங்கள் இத்தகைய கதிர்வீச்சை உமிழ் கின்றன. கணினித் திரையகம் இத்துணை அளவு தான் விஎல்எஃப் கதிர்வீச்சை உமிழ வேண்டும் என்கிற வரையறையினை எம்பீஆர் II என்னும் தன்னார்வத் தரவரையறை உள்ளது.

VLIW : விஎல்ஐடபிள்யூ : மிக நீண்ட நிரல் சொல் என்ற பொருளைக் குறிக்கும் Very Long Instruction Word என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சிறுசிறு எளிய நிரல்களை ஒன்றுசேர்த்து நீண்ட ஒற்றை நிரல் சொல்லாக உருவாக்கும் ஒருவகைக் கட்டுமானம். இந்நீண்ட நிரல் சொல் பல பதிவகங்களை எடுத்துக் கொள்கின்றது.

VM : விஎம் : மெய்நிகர் பொறி எனப் பொருள்படும் Virtual Machine என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மெய்நிகர் பொறிச் செயல்திறனை வழங்கும் ஐபிஎம்மின் பெருமுகக் கணினிகளுக்கான இயக்க முறைமை.

. vn : விஎன் : ஓர் இணையதள முகவரி வியட்நாம் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.

vocabulary : சொற்களஞ்சியம்;சொல் வளம் : ஒரு குறிப்பிட்ட கணினிக்காக ஒரு செயல் முறையை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடுகள் அல்லது நிரல்கள்.

vocal sounds : பேச்சொலிகள்.

voder : ஓடர் : பேச்சு ஒருங்கிணைப்பி.