பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1552

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

volatility

1551

volume



கங்களை இழந்துவிடக்கூடிய சேமிப்புச் சாதனம். இது விரைவற்ற சேமிப்பகம் என் பதிலிருந்து வேறுபட்டது.

volatility : விரைவுத்திறன் : ஒரு கோப்பு செய்முறைப்படுத்தப்படும்போது, பதிவேடுகள் சேர்க்கப்படுகிற அல்லது நீக்கப்படுகிற வேகவீதம். ஒரு தரவுத்தளத்தை வடிவமைப்பதில் இது முக்கியமான நிலையளவுரு ஆகும்.

volt : வோல்ட் : இரு முனைகளுக் கிடையேயான மின்னூட்ட வேறுபாடு அல்லது மின்னியக்கச் சக்தி. 1கூலம்ப் மின்னூட்டம், 1 ஜூல் வேலையை முடிக்கும் முனைகளின் மின்னியக்க அளவு 1 வோல்ட் எனக் கணக்கிடப்படுகிறது. (அல்லது) ஒம் மின் தடுப்பிமீது, பாயும் 1 ஆம்பியர் மின்னோட்டத்தை வழங்கும் மின்னியக்க வேறுபாடு.

voltage : மின்னழுத்தம் : மின் விசையின் அழுத்தம். ஒரு கணினி மின்சுற்று வழியில் உள்ள உயர்மின்னழுத்தம் 1 என்பதாலும், குறைந்த மின்னழுத்தம் 0' என்பதாலும் குறிக்கப்படுகிறது.

voltage regulator : மின்னழுத்த முறைப்படுத்தி : வெளிப்பாட்டு மின்னழுத்த முறைப்படுத்தி மின்னழுத்தத்தை முன் தீர்மானித்த ஓர் அளவில் வைத்திருக்கிற அல்லது முந்தையத் தீர்மானத்தின்படி மாற்றுகிற மின்சுற்றுவழி. இயல்பான உட்பாட்டு மின்னழுத்த மாறுதல் எவ்வாறிருந்தாலும் இந்த மாற்றம் நடைபெறுகிறது.

மின்னழுத்த முறைப்படுத்தி

volts alternating current : வோல்ட் மாறுநிலை மின்னோட்டம் : ஒரு மின்சார சமிக்கையின் உச்சம் முதல் உச்சம் வரையிலான மின்னழுத்த வீச்சுகள் அளவீடு.

volume : தொகுதி : பாகம்/ஒலியளவு : 1. கணினித் தரவுகளைச் சேமித்து வைக்கும் ஒரு வட்டு அல்லது நாடா. சிலவேளை