பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1553

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

volume conttol

1552

Von Neumann Arichitecture


களில் மிகப்பரந்த நிலைவட்டுகள் பல்வேறு பாகங்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பாகமும் ஒரு தனி வட்டாகவே கருதப்படும். 2. கேட்பொலி சமிக்கையின் ஒலியளவு.

volume control : ஒலியளவுக் கட்டுப்பாடு.

volume lable : வட்டுப் பெயர் : ஒரு வட்டுக்கு அளிக்கப்படும் பெயர் (பொதுவாக விரும்பினால் மட்டும்).

volume serial number : தொகுதி வரிசை எண் : ஒரு வட்டு அல்லது நாடாவை அடையாளம் காணப்பயன்படும் வரிசை எண். தேவையெனில் வைத்துக் கொள்ளலாம். எம்எஸ் டாஸ் முறைமையில் தொகுதி வரிசை எண் என்று குறிப்பிடப்படுகிறது. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் தொகுதிக் குறிப்பு எண் (Volume Reference Number) எனப்படுகிறது. தொகுதி வரிசை எண் என்பது தொகுதிச் சிட்டை (volume label), தொகுதிப் பெயர் என்பதிலிருந்து வேறு பட்டது.

volume table of contents : வட்டு உள்ளடக்கங்கள் : ஆப்பிள் டாசின் கீழ்நிலை வட்டுகளுக்கான கோப்பு ஒதுக்கும் பட்டிய

VON : வோன் : இணையத்தில் குரல் எனப் பொருள்படும். Voice on Net என்பதன் தலைப் பெழுத்துக் குறும்பெயர். இணையத்தின் வழியாக நிகழ்நேரக் குரல் மற்றும் ஒளிக் காட்சித் தரவுகளை அனுப்புவதற்கான வன்பொருள், மென் பொருள் தொழில்நுட்பத்தின் ஒரு பரந்த வகைப்பாடு. இச் சொல்தொடரை உருவாக்கியவர் ஜெஃப் புல்வர் (Jeff Pulver). வான் கூட்டணி என்னும் அமைப்பை உருவாக்கியவர். வான் தொழில் நுட்பத்தை வரைமுறைப்படுத்துவதை எதிர்த்தார். வான் தொழில்நுட்பத்தை பொது மக்களிடம் கொண்டு செல்ல ஆர்வம் காட்டினார்.

Von Neumann Architecture : வான் நியூமன் கட்டுமானம் : சிறந்த கணிதவியல் அறிஞரான ஜான்வான் நியூமன் உருவாக்கிய, கணினி அமைப்பின் மிகப் பொதுவான கட்டமைப்பு. நிரல் என்னும் கருத்துரு பயன்படுத்தப்பட்டது. நிரலை நிரந்தரமாகக் கணினியில் சேமித்து வைத்துக் கொண்டு கையாளமுடியும். பொறி அடிப்படை யிலான நிரல்கள் மூலம் அதனை மாற்றியமைக்க முடியும். வரிசைமுறையிலான