பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wafer

1555

WAIS


W

wafer : மென்தகட்டுச் சிப்பு : சீவல் : மூன்று அல்லது நான்கு அங்குலம் கணமுடைய வட்ட வடிவ தகடு. இதில் பல ஒருங்கிணைந்த மின் சுற்று வழிகள் உருவாக்கப்படுகின்றன. பின்னர் தனித்தனிச் சிப்புகளாகப் பகுக்கப்படுகின்றன.

wafer processing : மென்தகடு செயலாக்கம் : மெல்லிய தகடுகளாலான அரைக் கடத்திப்பொருளைச் செயலாக்கம் செய்து மின்சுற்றுகளை உருவாக்குவது. செயலாக்கத்திற்குப்பின் தகட்டினை வார்ப்புருபடிவம் (die) அல்லது சிப்புகள் என்று தனியாக்கப்படும்.

wafer-scale integration : மென்தகட்டு ஒருங்கிணைப்பு : ஒற்றை மென்தகட்டில் பல்வேறு நுண்மின்சுற்றுகளை ஒருங்கிணைத்து ஒரே மின் சுற்றாக கட்டுருவாக்குதல்.

wafer sort : தகடு பிரிப்பு : ஒரு மென் தகட்டில் எந்த டைஸ் ஏற்றுக் கொள்ளக்கூடியது என்பதைச் சோதித்தறிதல்.

WAIS : வெய்ஸ் : விரிபரப்பு தகவல் வழங்கன் என்று பொருள்படும் Wide Area Information Server என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில் ஆவணங்களைத் தேடி எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் யூனிக்ஸ் அடிப்படையிலான மென்பொருள். இணையத்தில் குவிந்து கிடக்கும் ஏராளமான ஆவணங்கள் கருப்பொருள் வாரியாக வகைப்படுத்தப்பட்டு அவற்றின், இருப்பிட முகவரிகள் 400-க்கு மேற்பட்ட வெய்ஸ் வழங்கன்களில் சேமித்து

வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட திறவுச்சொல் அடிப்படையில் அவற்றுள் நமக்குத் தேவையான தகவலைத் தேடிப் பெற முடியும். திங்கிங் மெஷின் கார்ப்பரேஷன், ஆப்பிள் கம்ப்யூட்டர், டோவ்ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து வெய்ஸை உருவாக்கினர். இயற்கை மொழி அடிப்படையிலான வினவல்களைப் பரிசீலிக்க இவர்கள் இஸட் 39. 50 தர வரையறைகளைப் பயன்படுத்தினர். தனித்த வலைத்தளம் ஒன்றிலும் வெய்ஸ் நிரலை ஒரு தேடுபொறியாகப் பயன்படுத்த முடியும். சில வேளைகளில் வெய்ஸ் மூலம் பெறப்படும் ஆவணப்