பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1560

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. wav

1559

weak typing




ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

E - மின்னூட்டம்
I - மின்னோட்டம்
R - மின்தடை
P - மின்சக்தி (வாட்டில்)

எனில்,

P = IxE = I2xR = E2./R


. wav : வேவ் : அலைவடிவ கேட்பொலி வடிவாக்கத்தில் பதிவு செய்துள்ள ஒலிக் கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப்பெயர் (file extension).


wave : அலை : கதிரியக்க சக்தியின் வடிவம். அனைத்து வானொலி சமிக்கைகளும், ஒளிக்கதிர்கள், எக்ஸ்- கதிர்கள் மற்றும் அண்டக் கதிர்களும் தொடர் அலைபோன்ற ஒரு சக்தியைக் கதிரியக்கம் செய்கின்றன.


waveform : அலைவடிவம் : ஒப்புமை (அனலாக்) வடிவில் ஒரு குறிப்பிட்ட ஒலி அலை அல்லது மின்னணு சமிக்கையின் அமைப்பு.


wavelet : சிற்றலை; அலைத் துணுக்கு : வரம்புக்குட்பட்ட நேரத்தில் மாறுபடுகின்ற ஒரு கணிதச் சார்பு. ஒலி போன்ற சமிக்கைகளை பகுத்தாய்வதற்கு அலைத்துணுக்குகள் உதவுகின்றன. மிகக்குறைந்த நேரத்தில் அலைவரிசையிலும் அலைவீச்சிலும் திடீரென மாற்றத்துக்கு உள்ளாகின்றன. ஆனால் சைன், கொசைன் சார்புகளில் வரம்பிலா நேரம்வரை அலைவரிசையும் (Frequency), அலைவீச்சும் (Amplitude) மாறாமல் அப்படியே இருப்பதைக் காணலாம்.


WΒΕΜ : டபிள்யூபிஇஎம் : வலை அடிப்படையிலான நிறுவன மேலாண்மை என்று பொருள்படும் Web-Based Enterprise Management என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு வலை உலாவியை (web browser), பிணையத்தைக் கண்காணிக்கும் ஒரு சாதனம் அல்லது ஒரு பயன்பாட்டு மென்பொருளுடன் நேரடியாகப் பிணைத்து வைக்கும் ஒரு நெறி முறை (Protocol).


weak typing : பலவீன இனப் பாகுபாடு; கண்டிப்பில்லா இன உணர்வு : தரவு இனங்களைக் (Data type) கையாளுவதில் நிரலாக்க மொழிகளில் கடைப் பிடிக்கப்படும் நடைமுறை. நிரலின் இயக்க நேரத்தில் ஒரு மாறிலியின் (Variable) தரவு இனத்தை மாற்ற அனுமதித்தல். (எ-டு) : சி#, ஜாவா போன்ற மொழிகளோடு ஒப்பிடுகை