பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1561

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wear

1560

web browsing centre



யில், சி-மொழி தரவு இனங்களைக் கையாள்வதில் ஒரு கண்டிப்பில்லாத நடைமுறையைப் பின்பற்றுகிறது எனலாம்.


wear : அணி


web : (தரவு) வலை; இணையம் : மீவுரையால் (Hyper Text) ஆன, ஒன்றோடொன்று தொடுப்புடைய ஏராளமான ஆவணங்களின் தொகுப்பு. பயனாளர், முகப்புப் பக்கம் (Home Page) வழியாக இணையத்தில் நுழைகிறார்.


web based Tamil education : இணையம் வழி தமிழ்க் கல்வி.


web browser : வலை உலாவி; இணைய உலாவி : வைய விரி வலையிலோ, ஒரு பிணையத்திலோ அல்லது தன் சொந்தக் கணினியிலோ பயனாளர் ஒருவர் ஹெச்டீஎம்எல் ஆவணங்களைப் பார்வையிடுவதுடன், அதிலுள்ள மீத்தொடுப்புகள் மூலம் பிற ஆவணங்களையும் பார்வையிட்டு தேவையான கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ள உதவும் ஒரு கிளையன் பயன்பாடு. லின்க்ஸ் (Lynx) போன்ற இணைய உலாவிகள், செயல்தளக் கணக்கு (Shell Account) வைத்திருப்பவர்கள் பயன்படுத்துவது. ஹெச்டீஎம்எல் ஆவணத்தின் உரைப் பகுதியை மட்டுமே பார்வையிட முடியும். பெரும்பாலான உலாவிகள் உரைப்பகுதி மட்டு மின்றி வரைகலைப் படங்கள், கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலையும் தருகின்றன. ஹெச்டிஎம்எல் ஆவணத்தில் உட்பொதிவாக இருக்கும் ஜாவா அப்லெட்டுகள் அல்லது ஆக்டிவ்எக்ஸ் இயக்குவிசைகள் போன்ற சிறு நிரல்களையும் இயக்கும் வல்லமை பெற்றுள்ளன. சில உலாவிகளுக்கு இதுபோன்ற பணிகளைச் செய்ய உதவி மென்பொருள்கள் (plug-ins) வேண்டியிருக்கலாம். தற்காலத்தில் பயன் பாட்டில் இருக்கும் இணைய உலாவிகள், பயனாளர்கள், மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் உதவுகின்றன. செய்திக் குழுக்களைப் பார்வையிடவும் கட்டுரைகள் அஞ்சல் செய்யவும் பயன்படுகின்றன. மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் இன்டர் நெட் எக்ஸ்புளோரர், நெட் ஸ்கேப் நிறுவனத்தின் நேவிக் கேட்டர் ஆகிய இரண்டு உலாவிகளும் உலகத்தில் பெரும் பாலான பயனாளர்களால் பயன் படுத்தப்ப்டுகின்றன. இணைய உலாவி சுருக்கமாக உலாவி என்றும் அழைக்கப்படுகின்றது.


web browsing centre : வலை உலாவி மையம்.