பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1566

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

whetstones

1565

white space character


 அச்சடிப்புச் செயல்முறை அமைந்துள்ள அச்சுப்பொறி.

whetstones : வெட்ஸ்டோன்ஸ் : பதின்மப் புள்ளி கணக்கீடுகளைச் சோதிக்கும் பெஞ்ச் மார்க் நிரல் தொடர். ஒரு நொடிக்கு எத்தனை வெட்ஸ்டோன்கள் என்ற அளவில் இதன் முடிவுகள் கூறப்படுகின்றன. வெட்ஸ்டோன் I-32 துண்மி, வெட்ஸ்டோன் II-64 துண்மி இயக்கங்களைச் சோதிக்கின்றன.

while loop : நிகழ்சுற்று.

WHIRLWIND : வேர்ல்விண்டு  : 1940களில் மாசாசூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) உருவாக்கப்பட்டு, 1950 களில் பயன்படுத்தப்பட்ட, வெற்றிடக் குழாய்களினால் ஆன இலக்கமுறைக் கணினி. சிஆர்டீ திரைக்காட்சி, நிகழ் நேரச் செயலாக்கம் ஆகிய புதிய கண்டுபிடிப்புகள் வேர்ல் விண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. இத்திட்டப் பணியில் உறுப்பினராய் இருந்த கென்னத் ஹெச் ஓல்சன் (Kenneth H. Olsen), 1957ஆம் ஆண்டில் டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷனை நிறுவினார்.

Whiteboard : ஒயிட்போர்டு; வெண்பலகை ; கரும்பலகை (நம் வழக்கு) : ஒரு பிணையத்தில் பல பயனாளர்கள் ஒரே நேரத்தில் ஓர் ஆவணத்தைத் திறந்து கையாள வகைசெய்யும் மென்பொருள். அனைத்துப் பயனாளர்களின் கணினித் திரைகளிலும் ஒரே நேரத்தில் ஆவணம் திறக்கப்படும். ஒரு கரும்பலகையில் எழுதப்பட்ட விவரங்களைப் பலரும் கூடி நின்று படிப்பதைப்போல.

white board window : வெண்பலகைச் சாளரம்.

white noise : வெள்ளை ஓசை ; வெண்ணிரைச்சல் : அச்சுப் பொறிகள், விசைப்பலகைகள், காலடிகள் போன்ற அலுவலகச் சந்தடிகளின் இடைவெளிகளை நிரப்புவதற்காக கேட்கக்கூடிய எல்லா அலைவெண்களிலும் உண்டாக்கப்படும் தொடர் ஓசை.

white paper : வெள்ளை அறிக்கை : பெரும்பாலும் ஒரு தொழில்நுட்பத் தரவுபற்றி முறைசாரா வகையில் விவரங்கள் தருதல் அல்லது வரைவு வரன்முறைகளை முன்வைத்தல்.

white space character : வெள்ளை இட எழுத்து : திரையில் தோன்ற வேண்டியிராத எழுத்து. சான்றாக, இடைவெளி, டேப், வரி திரும்புதல் போன்றவை. இந்த எழுத்துகளைப் பார்க்கவோ அல்லது