பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1567

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

who is

1566

Wide Area Telephone


 பார்க்காமல் இருக்கவோ பல சொல் செயலகங்கள் வாய்ப்பளிக்கின்றன.

who is : ஹூஇஸ்; யார் எவர்? : 1. இணையத்தில் சில களங்கள் (domains) வழங்கும் சேவை. அக்களத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுத் தளத்தில் மின்னஞ்சல் முகவரிகளையும், பயனாளர்கள் பற்றிய வேறுசில தரவுகளையும் பயனாளர் ஒருவர் அறிந்துகொள்ள இச்சேவை உதவுகிறது. 2. "யார் எவர்" சேவையைப் பெறப் பயன்படும் யூனிக்ஸ் கட்டளை. 3. நாவெல் பிணையத்தில் அந்த நேரத்தில் நுழைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்துப் பயனாளர்களின் பெயர்களையும் பட்டியலிடும் கட்டளை.

who is client : ஹூஇஸ் கிளையன்ட்; யார் கிளையன் : பயனாளர் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பிற தரவுகள் அடங்கிய தரவுத் தளத்தை அணுகுவதற்குப் பயனாளர்க்கு வாய்ப்பளிக்கும் ஒரு கட்டளை. (யூனிக்ஸிலுள்ள ஹூஇஸ் கட்டளை போன்றது).

who is server : ஹூஇஸ் செர்வர் ; வழங்கன் யார் : ஹூஇஸ் கிளையன்ட் கட்டளை மூலம் தரவு அறிய விரும்பும் ஒரு பயனாளருக்கு தரவுத் தளத்திலிருந்து பயனாளர் பெயர்கள். மின்னஞ்சல் முகவரிகளை (பெரும்பாலும் ஓர் இணையக் களத்தினில் கணக்கு வைத்துள்ள பயனாளர்களின் பட்டியல்) வழங்குகின்ற மென்பொருள்.

whole number : முழு எண் : பின்னப் பகுதிகள் இல்லாத நேர். எடுத்துக்காட்டு : 84 அல்லது 22. 0 அல்லது 0.

wide area network (WAN) : நாடளாவிய கணினிப் பிணையம்; விரிபரப்புப் பிணையம் : பல்லாயிரம் மைல் வட்டாரத்திற்குச் சேவைபுரியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட தகவல் செய்தித் தொடர்பு பிணையம்.

Wide Area Telephone Service (WATS) : விரிபரப்பு தொலைபேசி சேவை : 'வாட்ஸ்’ தொடர்பு எனப்படும் அணுகு இணைப்பு மூலம், ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில் தகவல் தொடர்பு கொள்வதற்கு வாடிக்கையாளரை அனுமதிக்கிற தொலைபேசி நிறுமங்கள் வழங்கும் சேவை. அமெரிக்கா ஆறு "வாட்ஸ்" மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சுழற்சி அடிப்படையில் மாதக் கட்டணம் செலுத்தி இந்த வசதியை பயன்படுத்தலாம்.