பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1568

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wide band

1567

wildcard characters



wide band : அகல் அலை வரிசை ; அகல் கற்றை : ஒரே பணியைத் திரும்பத்திரும்பச் செய்வதற்கான கணினி மொழிக் கட்டளை. தரவுத் தொடர்புகளில், குரல்வகை அலை வரிசையைவிட அலை அகற்சியில் அகலமாக உள்ள ஓர் அலைவரிசை.

wide/ broad band : அகல /விரி கற்றை.

wide SCSI or Wide SCSI-2 : விரிந்த ஸ்கஸ்ஸி அல்லது விரிந்த ஸ்கஸ்ஸி-2 : ஒரு நேரத்தில் 16 துண்மி (பிட்) கள் வீதம் வினாடிக்கு 20 மெகா பைட்டுகள் வரை தரவுப் பரிமாற்றம் செய்யக்கூடிய ஸ்கஸ்ஸி-2 இடைமுகம். இவ்வகை ஸ்கஸ்ஸி இணைப்பியில் 68 பின்கள் உள்ளன.

widow & orphan : துணையிலியும் அனாதையும் : அடுத்த பக்கத்தின் மேற்பகுதியில் தோன்றுகின்ற ஒரு பத்தியின் கடைசி வரியை துணையிலி (window) என்றும், ஒரு பக்கத்தின் கடைசிவரியில் வரும் ஒரு பத்தியின் முதல்வரியை அனாதை (orphan) என்றும் கூறுகிறோம்.

width : அகலம்.

width of field : புல அகற்சி.

width table : அகலப் பட்டியல் : ஒரு அச்செழுத்துத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு எழுத்தின் குறுக்குவாட்ட அளவுப் பட்டியல். சொல் செயலாக்க மற்றும் டி. டி. பி நிரல் தொடர்களில் பயன்படுத்தப்படுகிறது.

width, tape : நாடா அகலம்.

wiener ; வைனர், நெர்பெர்ட் (1894-1964)  : அமெரிக்க அறிவியலாளர். கணினியியல் எனப் பொருள்படும் cybernetics என்ற சொல்லைப் புனைந்து ஒரு புதிய அறிவியல் துறையை உருவாக்கியவர். மனித மூளையின் பல சிந்தனைச் செய்முறைகளைக் கணிதமுறையில் தீர்மானித்து, கணினிகளில் பயன்படுத்தலாம் எனக் கருதியவர். தானியக்கக் கோட்பாட்டின் முன்னோடி.

wild card : வரம்பிகந்த அட்டை ; வரம்பிலா உரு : ஒரு செயற்பாட்டுப் பொறியமைவு நிரலில் செருகப்படும் ஓர் எழுத்து. இது, பல்வேறு பொருள்படுவதாகக் கூறப்படும். இது கோப்புகளுக்குப் பெயரிடும் முறை.

wildcard characters : பதிலீட்டுக் குறிகள் : ஓர் எழுத்து அல்லது பல எழுத்துகளுக்குப் பதிலீடாகப் பயன்படுத்தப்படும் விசைப்பலகைக் குறி.