பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1581

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

World Wide Web

1580

WOSA


 களில் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

World Wide Web Consortium : வைய விரிவலைக் கூட்டமைப்பு : வைய விரிவலை தொடர்பான அனைத்துப் பிரிவுகளிலும் நடைபெறும் ஆய்வுகளைக் கண்காணித்து சிறந்த தரக் கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வணிக மற்றும் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு. சுருக்கமாக டபிள்யூ 3 சி (W3C) என்றழைக்கப்படும்.

World Wide Web or World-wide web (WWW) : வைய விரி வலை : உலக முழுவதிலுமுள்ள ஹெச்டீடீபீ வழங்கன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள, ஒன்றோடொன்று தொடர்புடைய மீத்தொடுப்பு ஆவணங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு. வைய விரிவலையிலுள்ள ஆவணங்கள் வலைப்பக்கங்கள் எனப்படுகின்றன இவை ஹெச்டீஎம்எல் மொழியில் எழுதப்பட்டவை. இவை யூஆர்எல் மூலம் அடையாளம் காணப்படுகின்றன. ஹெச்டீடீபீ நெறிமுறை மூலம் இவை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்குப் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. இவற்றில் மீத்தொடுப்புள்ள சொல் / சொல் தொடர் மீது சுட்டியால் சொடுக்க அதனால் சுட்டப்படும் இன்னோர் ஆவணம் பயனாளருக்குக் கிடைத்துவிடுகிறது. அந்த இன்னோர் ஆவணம் ஒரு வரைகலைப் படமாகவோ, ஒலி, ஒளிக்காட்சிக் கோப்பாகவோ, ஜாவா குறுநிரலாகவோ, ஆக்டிவ் எக்ஸ் இயக்குவிசையாகவோ இருக்கலாம். வலப்பக்கங்களைப் பார்வையிடும் பயனாளர் எஃப்டீபீ வழங்கனிலிருந்து கோப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மின்னஞ்சல் அனுப்பலாம். ஐரோப்பிய நுண் துகள் இயற்பியல் ஆய்வுக் கூடத்தில் (European Laboratory for Particle Physics - CERN) பணி புரிந்த டிமோத்தி பெர்னர்ஸ் - லீ (Timothy Berners - Lee) என்பவர் 1989 ஆம் ஆண்டில் வைய விரிவலையை உருவாக்கினார்.

worm : புழு : பெருக்கி : தன்னைத் தானே இரட்டிப்பாக்கிக் கொள்ளும் ஒரு நிரல் தொடர். முனையப் பெருக்கி மிகப் புகழ்பெற்றது. இணையத்தில் இது தன்னைப் பெருக்கிக் கொள்கிறது.

WOSA : வோசா : விண்டோஸ் திறந்த நிலை முறைமைக் கட்டுமானம் என்று பொருள்படும் Windows Open System Architecture