பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1590

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

X-Y chart

1589

X-Y-Z coordinate


குறிப்பிட்ட வன்பொருளையோ, இலக்க முறைமையையோ சாராதது.

X-Y chart : எக்ஸ்-ஒய் வரைபடம் : ஒரு தரவு தொடரை ஒரு நேர அச்சு இல்லாமல் இன்னொரு தரவு தொடருக்கு எதிராக வரைவதற்கு அனுமதிக்கிற வடிவம். இது இரு தொடர்களுக்குமிடையில் இணைத்தொடர்பு இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுகிறது.

x-y matrix : எக்ஸ்-ஒய் அணி : கிடைமட்ட அச்சும் (x-axis), செங்குத்து அச்சும் (y- axis) இணைந்து குறுக்கை/நெடுக்கை கொண்ட ஓர் அமைப்பு.

X-Y plotter : எக்ஸ்-ஒய் வரைவி : ஒரு காகிதத்தில், கணினி மூலம் எக்ஸ் ஒய் ஆயத்தொலைவுகள் அடிப்படையில் புள்ளிக்கோடுகளை அல்லது வளைகோடுகளை வரையும் வெளிப்பாட்டுச் சாதனம்.

x-y-z coordinate system : எக்ஸ்-ஒய்-இஸட் ஆயத்தொலை அமைப்பு : முப்பரிமாண கார்ட்டீசியன் ஆயத்தொலை அமைப்பு. கிடைமட்ட (x), செங்குத்து (y) அச்சுகளுக்கு செங்கோணமாய் அமைந்துள்ள மூன்றாவது (z) அச்சினையும் கொண்டிருக்கும். இந்த x-y-z ஆயத்தொலை அமைப்பு, கணினி வரைகலையில் நீளம், அகலம், ஆழம் கொண்ட மாதிரியங்களை உருவாக்கவும், முப்பரிமான வெளியில் மாதிரியங்களை நகர்ந்துசெல்லச் செய்யவும் பயன்படுகிறது.