பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1592

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Yes/No/Cancel

1591

yocto




தகவல் சேவை) என்று அழைக்கப்படுகிறது. 2. அனைத்து களப்பெயர்கள் அவற்றின் ஐபி முகவரிகளையும் கொண்ட இன்டர் நிக் பதிவுச் சேவையின் தரவு தளம் காண்க : IP Address, Domain Names 3. இணைய வணிகமுறை அடைவுச் சேவைகளையும் இது குறிக்கும். சில அச்சிலும், சில மின்னணு வடிவிலும் உள்ளன. சில இரு வடிவங்களிலும் நிலவுகின்றன.

Yes/No/Cancel : ஆம்/இல்லை/ விடு.

YHBT : ஒய்ஹெச்பிடி : நீங்கள் தூண்டிலில் மாட்டிக் கொண்டீர்கள் என்று பொருள்படும் You Have Been Trolled என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இணையத்தில் மின்னஞ்சல் மற்றும் செய்திக் குழுக்களில், செய்தியைப் பெற்றவர் அறிந்தே விரிக்கப்பட்ட வலையில் அறியாமல் மாட்டிக் கொண்டார் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

ΥΗL : ஒய்ஹெச்எல் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று பொருள்படும் You Have Lost என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில் மின்அஞ்சலில், செய்திக்குழுக்களில் ஒய்ஹெச்பிடீ-க்கு அடுத்து வழங்கப்படும் சொல்.

. yk. ca : . ஒய்கே. சி. ஏ : ஒர் இணைய தள முகவரி கனடாவிலுள்ள யூக்கான் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

Y modem : ஒய் மோடம் : எக்ஸ் மோடம் கோப்பு பரிமாற்ற நெறிமுறையிலிருந்து சற்றே மாறுபட்டது. கீழ்காணும் மேம்பாடுகளைக் கொண்டது. 1 கிலோ பைட் (1024 பைட்) தரவுத் தொகுதிகளைப் பரிமாறிக் கொள்ளும் திறன் பெற்றது. ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை அனுப்பும் திறன் பெற்றது. சுழற்சி மிகைச் சரிபார்ப்பு கொண்டது. கேன் என்னும் குறியீட்டை இரு முறை தொடர்ச்சியாய் அனுப்பிய பின் கோப்புப் பரிமாற்றத்தை நிறுத்தி வைக்கும்.

Y-network : ஒய் பிணையம் : மூன்று கிளைகளைக் கொண்ட நட்சத்திரப் பிணையம்.

yocto : யாக்டோ : அமெரிக்க அளவீட்டு முறையில் ஒரு செப்டில்லியனில் ஒரு பகுதியைக் குறிக்கும் முன்னொட்டுச் சொல். இது 1024 அளவுடையதாகும்.