பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. bit newsgroups

159

bit plane


Corporation for research and educational networking) இதனைப் பராமரித்து வந்தது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளிலுள்ள கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களின் பெருமுகக் கணினி அமைப்புகளிடையே (main frames) மின்னஞ்சல் மற்றும் கோப்புப் பரிமாற்றங்களுக்காக இப்பிணையம் பயன்பட்டது.

பிட்நெட், டிசிபீ/ஐபி நெறி முறைக்குப் பதிலாக, ஐபிஎம் மின் பிணையப் பணி உள்ளீடு என்ற பொருள் படும் Network Job Entry (NJE) என்னும் தகவல் பரிமாற்ற நெறிமுறையைப் பயன்படுத்தியது. இன்றைக்கு இணையத்தில் அஞ்சல் குழுக்களைப் (mailing lists) பராமரிக்கப் பயன்படும் லிஸ்ட்செர்வ் (Listserve) என்னும் மென்பொருள் தொகுப்பு பிட்நெட்டில் உருவாக்கப்பட்டது.

. bit newsgroups : துண்மி செய்திக் குழுக்கள்; துண்மி செய்தி அரங்குகள் : பிட் நெட்டி லுள்ள சில அஞ்சல் பட்டியல் அல்லது அஞ்சல் குழுக்களின் (mailing list) உள்ளடக்கத்தைப் பிரதி பிம்பமாய் தம்மகத்தே கொண்டுள்ள இணைய செய்திக் குழுக்களின் படிமுறை.

bitonal : இரு வண்ண.

bit operations : துண்மி செயல்பாடுகள் : தகவலுக்குள் குறிப் பிட்ட துண்மிகளை மட்டும் படிக்கும் அல்லது மாற்றும் நிரல் செயல்பாடுகள்.

bit oriented protocol : துண்மி சார்ந்த நெறிமுறை : தகவல் துண்மிகளின் தனித்தனி குழுக்களைப் பிரிக்கப் பயன்படும் துண்மி அமைப்பு.

bit parallel : துண்மி இணை : பல துண்மிகளை ஒரே சமயத் தில் அனுப்புதல். ஒவ்வொரு துண்மியும் கம்பித் தொகுதியில் உள்ள ஒவ்வொரு கம்பி வழியாகச் செல்லும்.

bit parity . துண்மிப் பொருத்தம்; துண்மிச் சமநிலை.

bit pattern : துண்மித் தோரணி : குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள ஒரு தொகுதி துண்மி சேர்ந்து இரும எண் ஆதல். இரும எண் இலக்கங்களின் குறிப்பிட்ட வடிவமைப்பு.

bit plane : துண்மித் தளம் : ஈஜிஏ-வில் ஒளிக்காட்சி இடை யகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு துண்மி தளமும் 0 - 3 ஆகக் குறிக்கப்படுகிறது. 16 நிறமுறையில், நான்கு தளங்கள் இணையாகப் பிரிக்கப்பட்டுக் குறிப் பிட்ட நினைவக முகவரியில்