பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bit position

160

bits per Second



நான்கு பட்டியல்களாகக் காணப் படுகின்றன. சில சமயங்களில் தளங்களை வரிசையாகச் சங்கிலியிட்டு ஒன்று அல்லது இரண்டு தளங்கள் இணைக்கப்படுவதுண்டு.

bit position துண்மி இட நிலை.
bit rate : துண்மி வீதம் : தரவு தொடர்பிலோ அல்லது வழித் தடங்களிலோ இலக்கங்கள் அல்லது துடிப்புகள் தோன்றும் விகிதம்.
bit serial : துண்மித் தொடர் : ஒரு வழியில் ஒன்றன்பின் ஒன்றாக துண்மிகளை அனுப்புதல்.
bit sign : துண்மி அடையாளம்.
bit slice microprocessor : துண்மித் துண்டு நுண் செயலி : பொதுவாக நுண்செயலிகள் எட்டுத்துண்மித் தொகுதி களையே (ஒரு பைட் = 8 பிட்டு கள்) கையாள்கின்றன. 2 பிட்டு கள், 4 பிட்டுகளில் ஆன தகவல் களைக் கையாளவும் முடிகிற நுண்செயலி துண்மித் துண்டு நுண்செயலி எனப்படுகிறது. ஏனைய நுண்செயலிகள் செய் கின்ற அதே பணிகளை இந்த நுண் செயலிகள் செய்து முடிக்க, நிரல் அமைக்க முடியும்.
bit-slice processor : துண்மி துண்டு செயலகம் : ஒரு தனி சிப்புவில் 2, 4 அல்லது 8 துண்மி துண்டுகள் தனித்தனியாக இயங்குமாறு உள்ள செயலகம், பலவித சொல் அளவுகள் உள்ளவாறு நுண்செயலகங்களை அமைத்தல். அமைப்பின் பிற உறுப்புகளைச் சேர்த்தவுடன் நுண் கணினியில் 8, 12, 16, 24 அல்லது 32 துண்மி கிடைக்கக் கூடிய முறை.
bit specifications : துண்மி வரன்முறைகள் : ஒரே நேரத்தில் மையச் செயலகம் கணிப்பீடு செய்யும் அளவான கணினியின் உள் சொல் அல்லது பதிவகத்தின் அளவு தகவல் பரிமாற்றப்பாதை, நினைவகத்திலிருந்து மைய செயலகத்துக்கோ அல்லது வெளிப் புறச் சாதனங்களுக்கோ தகவல்களை அனுப்பும் அளவு.
bits per inch : அங்குலத்துக்கு இத்தனை துண்மிகள் : தகவல் சேமிப்புத் திறனை அளக்கும் அலகு. ஒரு வட்டில் ஒரு வட்டத் தடம் (track) சுற்றில் கொள்ளுகின்ற துண்மிகளின் எண்ணிக்கை.
bits per second : ஒரு நொடிக்குத் துண்மிகள் : ஒரு நொடிக்கு இத்தனை துண்மிகள் என்ற வகையில் தரவு அனுப்பப்படும் விகிதத்தை அளக்கும் முறை. பிபீஎஸ் என்று சுருக்கி