பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

block diagram

165

blocking factor


வட்டு போன்ற ஒன்றுக்கு அனுப்பும் வெளிப்புறச் சாதனம்.

block diagram : கட்ட வரைபடம்; பகுதிவாரி வரைபடம் : தரவுகளை செயலாக்கம் செய்யப்படுகின்ற தருக்க வரிசையை குறிப்பிடும் வரைபட வடிவம்.

blocked process : தடுக்கப் பட்ட செயல்முறை : தேவையான வசதிகள் கிடைக்காமல் போதல் அல்லது முன்னதாகவே தடுக்கப்படுவதால் செய்யப்பட முடியாத கணிப்பு செயல் முறை.

blocked records : தொகுக்கப்பட்ட பதிவேடுகள் : இரண்டு அல்லது மேற்பட்ட தருக்கக் கோப்புகளில் உள்ள ஏடுகளை ஒரே குழுவாக்கி ஒற்றை ஏடாக மாற்றி அமைத்தல்.

block gap : தொகுதி இடைவெளி : சேமிப்பக நாடாக்களிலும், வட்டுகளிலும் தரவு, தொகுதி தொகுதியாகத்தான் எழுதப்படுகிறது. அவ்வாறு எழுதப்படும்பொழுது இரு தொகுதிகளுக்கிடையே சிறிது இடைவெளி விடப்படுகிறது. இவ்வாறு இரு தரவுத் தொகுதிகளைப் பிரிக்கும் இடைவெளி தொகுதி இடைவெளி எனப்படுகிறது.

block graphics : தொகுதி வரைகலை : தொகுதி வரை கலை எழுத்துகள், ஆஸ்கி எழுத்துகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வரைகலை உருவங்கள். இந்த எழுத்துகளை சாதாரண எழுத்துகளைப் போலவே கணினி கையாள்வதால் துண்மிப் பட வரைகலையைவிட தொகுதி வரைகலையை கணினி வேகமாகக் காட்ட முடியும். அவற்றை அனுப்புவதும் விரைவாக நடக்கும்.

block header : தொகுதித் தலைப்பு : ஒரு நினைவக தொகுதி யையோ மற்றும் அதன் உள்ளடக்கங்களையோ குறிப்பிடும் தரவுகளின் சிறு பதிவேடு.

blocking : தொகுத்தல்; தொகுதியாக்கம் : திரட்டு தொகுதி என்று அழைக்கப்படும் ஒரு தொடர்ச்சியான சேமிப்பு அலகாக குறிப் பிட்ட அளவில் பதிவேடுகளைத் தொகுக்கும் செயல். கணினியின் உள்ளீட்டு, வெளியீட்டு செயல் முறைகளின் திறனை அதிகரிக்க இவ்வாறு செய்வதுண்டு. சொல் செயலாக்கத்தில், உரையின் ஒரு பகுதி தொகுதியாக ஒதுக்கப் படுவதுண்டு.

blocking factor : தொகுக்கும் காரணி : ஒரு வட்டு அல்லது காந்த நாடாவில் உண்மையாக இருக்கும் பதிவேட்டின் படி உள்ள தருக்கப் பதிவேடுகளின் எண்ணிக்கை.