பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bookmark

171

boolean algebra


bookmark : பக்க அடையாளக் குறி; நினைவுக் குறி : 1. பின்னால் எளிதாக அடையாளம் காணும்பொருட்டு ஓர் ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இட்டு வைக்கும் அடையாளக் குறி. 2. நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற இணைய உலாவிகளில் ஒரு குறிப்பிட்ட இணையப்பக்கம் அல்லது இணைய முகவரிக்கு, பின்னால் மீண்டும் காணும்பொருட்டு ஒரு தொடுப்பினை நிலைவட்டுக் கோப்பில் குறித்து வைத்துக் கொள்வது.

bookmark file : அடையாளக் குறிக்கோப்பு : 1. நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் உலாவியில் இது ஒரு கோப்பு. நமக்குப் பிடித்தமான வலையகங்களின் முகவரிகளைக் கொண்டது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் விருப்பத் தளங்களின் கோப்புறை (Favourites Folder) எனப்படுகிறது. சூடான பட்டியல் (hotlist) என்றும் அழைக்கப்படுவதுண்டு. 2. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கேற்ப, ஹெச்டி எம்எல் வடிவத்தில் ஒரு பக்கத்தில் வெளியீடு செய்யப்படுகின்ற, நாம் விரும்பிப்பார்த்த வலையகங்களின் முகவரிகள் அடங்கிய கோப்பு.

boolean : பூலியன் : பெரும்பாலான கணினி மொழிகளில் பயன்படுத்தப்படும் தரவு இனம் (data type). உண்மை/பொய், சரி /தவறு, ஆம்/இல்லை என்பது போன்ற இரண்டிலொரு மதிப்புகளையே இந்தத் தரவு இனம் ஏற்றுக்கொள்ளும். சில மொழிகளில் நேரடியாகவே பூலியன் என்னும் தகவல் இனம் உண்டு. சரி, தவறு ஆகிய மதிப்புகளில் ஒன்றை இருத்திவைக்க முடியும். வேறுசில மொழிகளில் நேரடியான பூலியன் இனம் கிடையாது. சுழி என்னும் பூஜ்யம் தவறு எனவும், சுழியல்லாத மதிப்பு சரி எனவும் கையாளப்படுகிறது. பூலியன் குறிக்கணிதத்தை உருவாக்கிய ஆங்கிலக் கணித மேதை ஜார்ஜ் பூல் (George Bool) அவர்களின் பெயரில் இது அமைந்துள்ளது.

boolean algebra : பூலியன் குறிக்கணக்கு : குறிக்கணக்கில் உள்ளது போன்ற குறியீட்டு அளவையின் பிரிவு. எண் தொடர்களைப்பற்றிக் குறிப்பிடுவதற்குப் பதிலாக காரணகாரிய உறவுகளைப் பற்றி ஆராய்வது. மின்னணு கணினி தொடர் பொத்தானிடுதல் போன்ற துறைகளில் வெளியே தெரியாமல் இருந்த துறை. மின்னணு கணினியின் காரண - காரிய வடிவமைப்பில் ஒரு முக்கிய பிரிவாக உருவாகி உள்ளது. ஜார்ஜ் பூலேவுக்காக இவ்வாறு பெயரிடப்பட்டது.