பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

borrow

176

bottom-up design


பிலிப்கான் உருவாக்கிய முன்னணி பீ சி மென் பொருள் நிறுவனம். அதனுடைய டர்போ பாஸ்கல் கல்வி நிலையங்களிலிருந்து வெளிவந்து வணிகப்பொருளானது டர்ப்போ சி தொழில்துறை தர அளவு கோலானது. டர்போ பாஸ்கல் மற்றும் போர்லண்ட் சி++ மூலம் விண்டோஸ் மற்றும் பொருள் நோக்கு நிரலாக்கமும் இயலும்.

borrow : கடன் வாங்கு : கணித முறையில் கழித்தல் செய்யும் போது, குறைந்த வரிசை இலக்கத்தினை உயர்த்தி அடுத்த உயர் வரிசை இலக்கத்திலிருந்து ஒன்று கழிக்கப்படுகிறது.

boss screen : முதலாளியின் திரைக் காட்சி; மேலதிகாரியின் திரைத் தோற்றம் : அனைத்துக் கணினி இயக்க முறைமைகளிலும் கணினி விளையாட்டுகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. சொந்தக்கணினிகளின் வருகைக்குப்பின் கணினி விளையாட்டுகள் பலரையும் ஈர்த்தன. அலுவலகங்களில் கணிப்பொறிகள் புகுத்தப்பட்டபின், அலுவலக ஊழியர்கள் பணி நேரத்தில் கணினி விளையாட்டுகளில் மூழ்கி விடுவது வாடிக்கையாக நிகழும் ஒன்று. அந்த நேரம் முதலாளி அல்லது மேலாளர் அங்கே வந்து விட்டால், உடனடியாக கணினித் திரையில் ஒரு புதிய தோற்றத்தை வரவழைத்து விடுவர். இது போல முதலாளி/மேலதிகாரி வரும்போது காட்டுவதற்கென்றே டாஸ் விளையாட்டுகளில் தனிச்சிறப்பான திரைத் தோற்றங்கள் இருந்தன. அதில் பெரும்பாலும் வணிகம் தொடர்பான விவரங்கள் காணப்படும். இப்போதுள்ள மேக், விண்டோஸ், லினக்ஸ் பணித்தளத்தில் இத்தகைய சிக்கல் இல்லை. நொடியில், ஒரு கட்டிச் சொடுக்கில் திரைத் தோற்றத்தை மாற்றிவிட முடியும்.

bot : பாட் : நாடாவின் தொடக்கம் எனப்பொருள்படும். Beginning of Tape என்பதன் குறும் பெயர். ஒரு காந்த நாடாவில் பதிவு செய்வதை எந்த இடத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பதைக் குறிக்கும் குறியீடு.

bottleneck : இடர்ப்பாடு.

bottom-up design : கீழிருந்து-மேல் வடிவமைப்பு : ஒரு மென் பொருள் பயன்பாட்டை உருவாக்குவதில் பின்பற்றப்படும் வடிவமைப்புச் செயல்முறை. முதலில் கீழ்நிலைப் பணிகளுக்கான நிரல்வரைவும், பிறகு அவற்றை அடிப்படையாகக் கொண்டு உயர்நிலைப் பணி