பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

business graphics

195

business systems planning


ஒரு ஆண்டு அறிக்கையும், வெளியிடுகின்றது.

business graphics : , வணிக வரை கலை : 1. வட்ட (Pie) வரைபடங்கள், நீள்கட்ட வரை படங்கள், பிரிவு படங்கள், மற்றும் பிற புலனாகும் முறைகளில் வணிகச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களின் விற்பனைக்கும் விலைக்கும் உள்ள வேறுபாடு. துறை வாரி விற்பனை, உற்பத்திப் பொருள் செயல்பாட்டின் ஒப்பீடு, இருப்பு விலைகள் போன்ற துறைகளில் அளித்தல். 2. தரவுகள் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வண்ணம் காட்டக்கூடிய பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்குதல்.

business information processing : வணிக தகவல் செயலாக்கம் : வணிகச் சூழ்நிலையில் தகவல் செயலாக்கம் மற்றும் பரிமாற்றத்தை விளக்கும் ஒரு பொதுச் சொல். விலைப் பட்டியல் தயாரித்தல் அல்லது விமானப் பயண முன் பதிவுகள், காசோலை நீக்கம், சம்பளப்பட்டி வெளியீடு போன்றவை எடுத்துக் காட்டுகள்.

business machines : வணிக எந்திரங்கள் : வணிகச் செயல்பாடுகளுடன் தொடர்புள்ள கணினிகள், சொல் செயலாக்க எந்திரங்கள், முனையங்கள் மற்றும் பிற மின்னணு, எந்திரக் கருவிகள்.

business mini computer : வணிகச் சிறு கணினி.

business - oriented programming language : வணிகம் சார்ந்த நிரலாக்க மொழி : வணிகப் பயன்பாடுகளில் அதிக தரவுக் கோப்புகளைக் கையாளக் கூடிய தாக உருவாக்கப்பட்ட மொழி. (எ. டு. கோபால் COBOL)

business programming : வணிக நிரலாக்கம் : கணினி தீர்வுக்காக வணிகப் பிரச்சினைகளுக்குக் குறியீடு இடப்படும் கணினி நிரலாக்கும் பிரிவு. பொதுவாக குறைந்த கணக்கீடுகளே இடம் பெற்றாலும் ஏராளமான தரவு உள்ளீடு வெளியீடுகளைக் கொண்ட கோப்புகளைக் கையாளக் கூடியது.

business software : வணிக மென்பொருள் : மின்னணு விரிதாள், தரவுத் தள மேலாண்மை அமைப்புகள், வணிக வரைபட சம்பளப் பட்டி நிரல்கள் மற்றும் கணக்கீட்டு நிரல்கள் போன்ற வணிக பயன்பாடுகளுக்காக வென்றே குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட பணித்தொகுப்புகள்

business systems planning (BSP) வணிகமுறைத் திட்ட மிடல்.