பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bus mouse

196

Button


bus mouse : மின் பாட்டை சுட்டி : வரிசைத் துறையில் (Port) பொருந்துவதற்குப் பதிலாக விரிவாக்க அட்டையில் பொருந்தும் மின்பாட்டைச் சுட்டி.

bus network : பாட்டைப் பிணையம் : மின் பாட்டை



அல்லது ஒரு பொது விநியோக வழித்தடத்தினைப் பயன்படுத்தி அனைத்து நிலையங்கள் அல்லது கணினிச் சாதனங்கள் தகவல் தொடர்பு கொள்ளும் அமைப்பு.

bus system : மின்பாட்டை முறைமை : மின்பாட்டை அமைப்பு : கணினி உள்ளே தரவுகள் போவதற்கு வகை செய்யும் பாதைகளின் கட்டமைப்பு. தரவு மின் பாட்டை, கட்டுப்பாட்டு மின்பாட்டை, முகவரி மின்பாட்டை ஆகியவை கணினியில் முக்கிய மின்பாட்டைகளாக அடையாளம் காணப்படுகின்றன.

bussy hour : மிகைவேலை நேரம்.

bus topology : மின்பாட்டை அமைப்பியல் : மின்னணு கட்டமைப்பு கட்டுமானத்தை விளக்குவது.

button bar : பொத்தான் பட்டை

Button : பொத்தான் : சுட்டியினால் சொடுக்கினால் திரையில் ஒரு இடத்தில் ஒரு செயலைத் துவக்கவோ அல்லது நிறுத்தம்