பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

calibration

204

callback


நிரல்கள் சுவரில் மாட்டும் நாள்காட்டிகளை ஒத்துள்ளன. சிலவற்றில், ஒரு நாளில் ஒவ்வொரு மணி நேரத்திலும் நினைவுக் குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ள முடியும். காலங்காட்டியில் குறிப்பிட்டுள்ளபடி நமது பணியை நமக்கு நினைவூட்டவல்ல நிரல்களும் உண்டு. ஒரு கணினிப்பிணையத்தில், ஒர் அலுவலகத்தின் பல்வேறு அலுவலர்களின் காலங்காட்டிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் திறனுள்ள நிரல்களும் உள்ளன.

calibration : மதிப்பாராய்தல் : அளவீடு செய்தல் : ஒரு கட்டுப்பாட்டுக் குமிழ் கைப்பிடியில் (knob) ஏற்படுத்தப்பட்டுள்ள, நிர்ணயிக்கப்பட்ட சரியான மதிப்பினையோ அல்லது ஒரு மீட்டரில் ஒவ்வொரு அளவை எண்ணிக்கையில், சரியான மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட தரத்தையோ ஒத்திட்டுப் பார்த்து அல்லது அளந்து முடிவு செய்யும் செயல்முறை.

call : அழைப்பு : 1. கணினி நிரலில் ஒரு குறிப்பிட்ட துணைச் செயல்பாட்டுக்குக் கட்டுப்பாட்டை மாற்றுவது. 2. தரவு தொடர்பில், அழைக்கும் நபர் செய்யும் செயல், அல்லது ஒரு அழைப்பினைச் செய்வதற்கு தேவையான செயல்பாடுகள் அல்லது இரு நிலையங்களுக்கும் இடையிலே உள்ள இணைப்புகளை மிகத் திறமையாகப் பயன்படுத்துவது.

callable statement : அழைதகு கூற்று.

call accepted packet : அழைப்பேற்புப் பொட்டலம்; அழைப் பேற்ற பொதிவு.

callback : திரும்ப அழைப்பு : தொலைபேசி மூலமாக அணுகும் ஒரு கணினியில் பயனாளரை அடையாளங்காணும் ஒரு பாதுகாப்பு முறை. ஒரு பயனாளர் கணினி அமைப்பை தொலைபேசி மூலமாக அணுகுகிறார். அடையாளப் பெயரையும் நுழை சொல்லையும் தருகிறார். உடனே இணைப்புத் துண்டிக்கப்பட்டுவிடும். கணினி, முன்பே குறித்து வைத்துள்ள அந்தப் பயனாளரின் தொலைபேசி எண்ணுக்குத் தானாகவே தொடர்பு கொண்டு, இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். இந்தப் பாதுகாப்புமுறை, அத்துமீறி நுழையும் ஊடுருவிகளைத் தடுக்கிறது. ஒரு பயனாளரின் நுழை பெயரையும், நுழை சொல்லையும் இன்னொருவர்