பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

camera-ready artwork

207

Cancel


கணினியில் தட்டச்சு செய்து தாளில் அச்செடுப்பர். பிறகு விவரங்களையும் இடையிடையே இடம்பெறும் படங்களையும் வெட்டி ஒர் அட்டையில் ஒட்டுவர். அச்சில் வர வேண்டிய பக்கங்களை இவ்வாறு அட்டைகளில் ஒட்டி வடிவமைப்பர். பிறகு அதனை ஒளிப்படக்கருவி மூலம் ஒளிப்பட ஃபிலிமாக படம் பிடிப்பர். அந்த ஃபிலிமை வைத்து அச்சு வார்ப்பினை உருவாக்குவர். அச்சு வார்ப்பினைக் கொண்டு நூல் பக்கங்களை அச்சிடுவர். ஆனால், இப்போதெல்லாம் அட்டைகளில் வெட்டி ஒட்டிப் பக்கங்களை வடிவமைக்க தேவையில்லை. கணினித் திரையிலேயே வெட்டி ஒட்டி பக்கங்களை வடிவமைக்க வல்ல மென்பொருள் தொகுப்புகள் பயன்பாட்டில் உள்ளன. அச்சுக்கு தயாரான பக்கங்களை உருவாக்க முடியும் என அவை விளம்பரப்படுத்தப்படுகின்றன.

camera-ready artwork : ஒளிப் படக் கருவிக்குத் தயாரான கலை வேலை : வணிக அச்சகப் பகுதியில் ஒளிப்படம் எடுக்கத் தயாராக உள்ள அச்சிடும் பொருள். ஒருமுறை ஒளிப்படம் எடுத்த பின் அச்சுத் தகட்டினைச் செய்யத் தயாராக உள்ளது.

campus interview : வளாக நேர் முகத் தேர்வு.

campuswide information system : வளாகத் தகவல் முறைமை : கணினிப் பிணையங்கள் மூலமாக ஒரு கல்லூரி அல்லது பல்கலைக் கழக வளாகத்துக்குள் தகவல் மற்றும் பிறசேவைகளை வழங்கும் முறை. இத்தகவல் அமைப்பு முறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறிப்புகள், வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் நிரல்கள் அனைத்தும் இருக்கும். தரவுத் தளங்களை அணுகும் வசதியும் இருக்கும்.

Canadian information Processing Society; CIPS : கனடாவின் தகவல் செயலாக்கச் சங்கம்; சிப்ஸ் : தகவல் செயலாக்கத் துறையில் பொதுவான ஆர்வமுள்ள கனடாக்காரர்களை ஒன்று திரட்ட ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. தங்களது வாழ்க்கையை கணினி தகவல் செயலாக்கத் துறைகளில் அமைத்துக் கொண்டுள்ள 400-க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள், வணிகர்களை உறுப்பினர் களாகக் கொண்டது.

cancel : ரத்து; விடு; நீக்கு : அப்போது தட்டச்சு செய்த வரியை நீக்குவதற்கான விசைப் பலகைச் செயல்பாடு.