பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

carry digit

217

cartesian coordinates


வும், 1 மீந்திடும் துண்மியாகவும் அமைகிறது.

மேற்கண்ட கூட்டலில் மூன்று முறை 1 மீதமாகிறது. முதல் இருமுறை அடுத்த கூட்டலுடன் சேர்க்கப்படுகிறது. கடைசியாக மீந்திடும் 1 விடையின் இடப்புறத் துண்மியா அமர்ந்து கொள்கிறது.

carry digit : மிகுதி இலக்கம் : கூட்டலின்போது ஒரு நெடுக்கையிலிருந்து அடுத்ததற்குக் கொண்டு செல்லப்படும் இலக்கம். பதின்ம முறையில் 5 + 7-ஐக் கூட்டும்போது கூட்டுத்தொகை 2 ஆகவும் மிகுந்திடும் இலக்கம் 1 ஆகவும் வரும். இரும எண் முறையில் 1+1+0+1-க்கு கூட்டுத் தொகை 1 மிகுந்திடும் இலக்கம் 1.

கார்ட்டீசியன் ஆயத்தொைைலவுப் புள்ளிகள்

carry flag : மிகுதி ஒட்டி : மையச் செயலகத்தின் ஒட்டி பதிவகத்தில் உள்ள துண்மிகளில் ஒன்று. பிழை நிலையைக் குறிப்பிட டாஸ் (DOS) பணிகளில் பயன்படுத்தப்படுகிறது.

carry register : மிகுதிப்பதிவகம்; வழிவிப் பதிவகம் : சுழற்சி அல்லது மிகுந்திடும் சூழ்நிலையில் சேர்ப்பியில் விரிவாகச் செயல்படும் ஒரு துண்மியின் பதிவு. இணைப்புப் பதிவகம் என்றும் அழைக்கப்படும்.

cartesian coordinates : கார்ட்டீசியன் ஆயத்தொலைவுப்புள்ளிகள் : ஒரு தளத்தில் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் இரு அச்சுகள் (இரு பரிமாணம்), அல்லது