பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cartesian coordinate system

218

cartridge disk unit


வெளியில் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் மூன்று அச்சுகள் - இவற்றை அடிப்படையாகக் கொண்டு குறிக்கப்படும் ஒரு புள்ளி. இவற்றில் கிடைமட்ட அச்சு x எனவும், செங்குத்து அச்சு y எனவும் இவை இரண்டுக்கும் 90 டிகிரி உயரவாக்கில் அமையும் அச்சு z என்றும் அழைக்கப்படுகின்றன. வீட்டில் அறையின் ஒரு மூலையில் இது போன்ற மூன்று அச்சுகளின் அமைப்பைக் காணலாம். தரையில் உள்ள ஒரு புள்ளியை x, y ஆகிய இரு அச்சுகளின் ஆயத்தொலைவு அடிப்படையில் குறிப்பிடலாம். தரைக்கு மேல் மேல்தளம் வரையுள்ள எந்தவொரு புள்ளியையும் மூன்று அச்சுகளின் ஆயத் தொலைவுகளாகக் குறிப்பிட வேண்டும். 17ஆம் நூற்றாண்டில் இந்த வரைவியல் கணித முறையை ஃபிரெஞ்சுக் கணித மேதை டகார்ட்டீஸ் (Descartes) அறிமுகப்படுத்தினார்.

Cartesian coordinate system : கார்டீசியன் ஆயத்தொலை அமைப்பு : ஃபிரெஞ்சு கணிதவியலார் ரெனி டெஸ்கார்ட் கார்டீசியன் பெயரில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இதன்படி, தளத்தில் உள்ள ஒரு புள்ளியின் தூரம் இரண்டு நேர் கோடுகளில் இருந்து கணக்கிடப்படுகிறது. அவை அச்சுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு அச்சிற்கான தூரமானது மற்றொரு அச்சிற்கு இணையாகக் கணக்கிடப்படுகிறது. புள்ளியுடன் தொடர்புள்ள இந்த எண்கள் அந்த புள்ளியின் ஆயத்தொலைவுகள் எனப்படும். இது செவ்வக ஆயத்தொலைவு அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

cartridge : நாடா பேழை; பேழை; பொதியுறை : ரோமில் நிரந்தரமாகச் சேமிக்கப்படும் மென்பொருளைக் கொண்டுள்ள தனிப்பேழை. வசதியான, நீண்ட காலம் வரக்கூடிய, பயன்படுத்த எளிதான, ஒசையற்ற, அழிக்க முடியாத, கணினியில் ஒரு சிறப்பு இடத்தில் நுழைக்கப்படும் பேழை. வட்டிலோ, நாடாவிலோ படி எடுக்க முடியாது. Solid state cartridge என்றும் Rom Cartridge என்றும் அழைக்கப்படுகிறது.

cartridge disk unit : பொதியுறை வட்டகம் : சேமிப்பகச் சாதனம். இதில் இரு வகை வட்டுகள் உள்ளன. ஒன்று நிலையாக நிற்பது. மற்றொன்று மீண்டும் பயன்படக்கூடியது.