பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cassette tape

223

CAT scan


பேழைகளைப் பயன்படுத்தி இலக்க முறை தரவுகளைப் பதிவு செய்து சேமிக்கவும், பின்னர் ஒருமுறை இந்த தரவுகளைக் கணினியின் உள் இருப்பகத்தில் ஏற்றவும் வடிவமைக்கப்பட்ட சாதனம். நுண்கணினிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

cassette tape : பேழை நாடா : ஏறக்குறைய 1/3 செ. மீ. அகலமுள்ள காந்த நாடா. சிறிய பிளாஸ்டிக் பேழையில் வைக்கப்பட்டிருப்பது.

casting : இனமாற்றம் : நிரலாக்கத்தில் ஒரு தரவினை மதிப்பை வேறொரு தரவின மதிப்பாக மாற்றியமைத்தல்.

CAT : கேட் : Computer Assisted Training and Computerised Axial Tomography என்பதன் குறும்பெயர். கணினி உதவிடும் பயிற்சி மற்றும் கணினிமய அச்சு ஊடுகதிர் உள்தளப் பட முறை (Tomography) என்பதன் சுருக்கம்.

catalog : திரட்டு; அடைவு : ஒவ்வொரு வகையாக விவரித்து வரிசையாகச் சேர்த்து வைப்பது. நிரல்கள் அல்லது ஒரு வட்டில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளின் பட்டியலை வரிசைப் படுத்துதல். ஒரு வட்டைத் திரட்டி அமைத்தல் என்றால் ஒரு வட்டில் உள்ள அனைத்துக் கோப்புகளின் பட்டியலையும் அச்சிட்டுத் தருமாறு கணினியைக் கேட்பதாகும்.

catch : பிடி.

catena : தொடுப்புப் பட்டியல் : பல்வேறு உறுப்புகளைச் சேர்த்துத் தொடுக்கப்பட்ட ஒரு பட்டியலில் ஒர் உறுப்பு, பட்டியலிலுள்ள அடுத்த உறுப்பினைச் கட்டுமாறு அமைக்கப்பட்டிருக்கும்.

category : வகையினம்.

category storage : வகையினச் சேமிப்பகம்.

cat eye பூனைக் கண்.

cathode : எதிர்மின்வாய் : மின்னணுவியல் சொல். மின்னணுக்களை எதிர்நிலை (Negative) சக்தியுள்ள எதிர் மின்வாயிலிருந்து நேர்நிலை (positive) சக்தியுள்ள நேர்மின் வாய்க்கு மாற்றும் சாதனம்.

cathode ray tube (CRT) : எதிர் மின் கதிர்க் குழாய் : தகவலைக் காட்டக்கூடிய திரை உள்ள மின்னணுக் குழாய்.

cathode ray tube visual display unit : எதிர்மின்வாய்க் கதிர்க் குழாய் காட்சித் திரையகம்.

CAT scan : கேட் வருடல் : Computer Assisted Tomography