பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CD2

227

CDFS


CD2 : சிடி : 1. மின்சாரம் அறியப்பட்டது என்று பொருள்படும் Current Detected என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒர் இணக்கியிலிருந்து, இணைக்கப்பட்ட ஒரு கணினிக்கு அனுப்பப்படும் சமிக்கை. இணக்கி, தகவலை ஏற்கத் தயார் நிலையில் இருப்பதை உணர்த்துவது. காண்க DCD. 2. குறுவட்டு என்று பொருள்படும் Compact Disc என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

CDC : சிடிசி : Call Directing Code என்பதன் குறும்பெயர். ஒரு செய்தி அல்லது ஆணையை தானாகவே வழி நடத்திச் செல்லும் மூன்று அல்லது இரண்டு எழுத்துகளைக் கொண்ட ஒரு குறியீடு.

C-Drive : சி - இயக்ககம் : கணினியின் உள்ளே நிலையாகப் பொருத்தப்பட்டுள்ள தரவு சேமிப்பு வட்டு இயக்ககம், எப்போதும் 'சி' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

cdev : சிடெவ் : மெக்கின்டோஷ் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு பயன்பாட்டு நிரல். கணினிச் சாதனங்களை நம் விருப்பப்படி அமைத்துக் கொள்வதற்குப் பயன்படுகிறது. மேக் பதிப்பு 6 (Mac OS 6) -ல் இந்த நிரல், முறைமைக் கோப்புறையில் வைக்கப்பட்டிருந்தது. விசைப்பலகை மற்றும் சுட்டிக்கான சிடெவ்கள் கணினியை இயக்கும்போதே நிறுவப்பட்டுவிடும். ஏனைய சிடெவ்கள் அந்தந்த மென்பொருள் தொகுப்புகளுடன் இணைந்து வருகின்றன. மேக் பதிப்பு 7இல் சிடெவ்கள் கன்ட்ரோல் பேனல்கள் என்று அழைக்கப்பட்டன.

CDFS : சிடிஎஃப்எஸ் : 1. குறுவட்டில் பயன்படுத்தப்படும் கோப்பு முறைமை. 32 துண்மி (பிட்) பாதுகாப்பு முறையில் இது அமைந்துள்ளது. இந்த அடிப்படையிலேயே விண்டோஸ் 95/98 ஆகிய இயக்க முறைமைகளில் குறுவட்டின் உள்ளடக்கத்தை அணுகும் முறைகள் வரையறுக்கப்படுகின்றன. 2. யூனிக்ஸ் இயக்க முறைமையில், ஒரு கோப்பு முறைமை, படிக்க மட்டுமேயான, கழற்றி எடுக்கப்படும் ஒர் ஊடகத்தில் (குறிப்பாக குறுவட்டு) அமைந்துள்ளது என்பதைக் குறிக்கும் தகுதிச் சொல். குறுவட்டு ஐஎஸ்ஓ 9660 தர நிர்ணயப்படி அமைந்தது என்பதை இச்சொல் குறிக்கும். நிலைவட்டு, நாடா, தொலைவுப் பிணைய இயக்ககங்கள் மற்றும் குறுவட்டு இயக்ககங்களை