பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

center vertically

232

centralized data processing


உயர்நிலை கணிப் பணி மேம்பாட்டு மையம் : சுருக்கமாக சி - டாக் (CDAC) என அழைக்கப்படுகிறது. மைய அரசு நிறுவனம்.

center vertically : செங்குத்து மையப்படுத்து.

centering cone : மையப்படுத்தும் கூம்பு : 5. 25 நெகிழ்வட்டை (ஃபிளாப்பி) இயக்கி அச்சாணியில் எற்றப் பயன்படுத்தும் சிறிய செயற்கை இழை அல்லது உலோகக்கூம்பு. இயக்ககக் கதவை மூடியவுடன், இது வட்டின் மையக் குழியில் நுழைக்கப்படுகிறது.

centi : சென்டி : நூறாவது என்பதைக் குறிக்கும் மெட்ரிக் அளவை முன் சொல். நூறு என்பதைக் குறிக்கும் ஹெக்டோவுடன் வேறுபடுத்திப் பார்க்க.

centi second : சென்டி நொடி : ஒரு நொடியில் நூறில் ஒரு பங்கு.

central control unit : மைய கட்டுப்பாட்டகம்.

central information file : மைய தரவு கோப்பு : முக்கிய தரவு சேமிப்பு அமைப்பு.

central office : மைய அலுவலகம் : தரவு தொடர்பு அமைப்பில் வாடிக்கையாளர்களின் தரவு தொடர்புத் தடங்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்படும் இணைப்பு மையம்.

central processing : மையச் செயலாக்கம்.

central processing unit : மையச் செயலகம்.

central processor : மையச் செயலி; மையச் செய்முறைப்படுத்தி; மையச் செயலாக்கி.

central site : மையத் தளம் : பகிர்ந்தமை செயலாக்க அமைப்பில் முக்கிய கருவிகள் உள்ள இடம்.

central spindle : மையச் சுழல் தண்டு.

central tendency : மையப் போக்கு : எதிர்பார்க்கப்பட்ட மதிப்புகளுக்கு ஏற்றதாக தரவுகள் அமையக் கூடிய வாய்ப்பு.

central terminal : மைய முனையம் : கணினிக்கும் தொலை தூர முனையத்துக்கும் இடையே தரவு தொடர்பு கொள்வதற்கு இடைப்பட்ட ஊடகமாகப் பயன்படும் வன்பொருள் தாங்கி.

centralized data processing : மையப்படுத்தப்பட்ட தரவு செயலாக்கம் : ஒரு நிறுவனம் தன்னுடைய கணினி கருவிகளையெல்லாம் ஒரே இடத்தில்