பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chaining printer

237

channel


உள்ள முகவரிகளைப் பயன்படுத்தி, ஒரு கோப்பில் தரவு தேடும் நுட்பம். இதில் சங்கிலி முறையில் ஒவ்வொரு பதிவேடும் அடுத்த பதிவேட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

chaining printer : சங்கிலி அச்சுப் பொறி : அச்சிடும் இடங்களில் செங்குத்தாகச் சுற்றும் சங்கிலியில் எழுத்துகளை அமைத்துள்ள அச்சுப் பொறி, அச்சுக் சங்கிலியில் அமைக்கப்பட்டுள்ள எழுத்துகளின் மீது ஒரு அச்சு சுத்தி அடிப்பதன் மூலம் காகிதத்தில் அச்சிடுகிறது.

chain printing : சங்கிலி அச்சுப்பதிவு.

Challenge Handshake Authentication Protocol : சேப் : (CHAP) : பீபீபீ (ppp - point to point protocol) நெறிமுறை வழங்கன் : கணினிகளில் இணைப்பு ஏற்படுத்திக் கொள்பவரின் அடையாளத்தை இணைப்பு ஏற்படுத்தும் போதோ அல்லது அதன்பிறகோ அடையாளம் காண்பதற்காகப் பயன்படுத்தப்படும் சான்றுறுதி நெறிமுறைத் திட்டமுறை.

chamfer : சமன் விளிம்பு : இரண்டு சந்திக்கும் கோடுகளுக்கு இடையில் சமன்படுத்தப்பட்ட விளிம்பு.

change : மாற்று.

change agent : மாற்ற உதவியாளர் : ஒரு நிறுவனத்தின் மாற்றத்திற்கு எதிர்ப்பு ஏற்படின் அதைச் சமாளிக்கும் முறைமைப் பகுப்பாய்வாளர் (System Analyst).

change all : அனைத்தும் மாற்று.

change directory command : கோப்பக மாற்று ஆணை : டாஸ், யூனிக்ஸ் முறைகளில் செயல்படும் கட்டளை.

change dump : மாற்றுத் திணிப்பு : முன்பு பதிவு செய்த நிகழ்வினை அடுத்து ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய நினைவகத்தின் அனைத்து தன்மைகளையும் வெளியிடல்.

change file : மாற்றக் கோப்பு : மாற்றப்பட்ட தரவு கோப்பு. தலைமைக் கோப்பைப் புதுப்பிக்கப் பயன்படும் செயல் பரிமாற்றக் கோப்பு.

change of control : கட்டுப் பாட்டு மாற்றுகை.

channel : இணைப்பு : வழி : தடம்; அலைவரிசை : 1. இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட முனைகளை இணைக்கும் மின்சார அல்லது