பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

charges magnetically

244

chat


charges magnetically : காந்த‌ முறை மின்னூட்டம்.

Charles Babbage Institute . சார்லஸ் பாபேஜ் இன்ஸ்டிடியூட் : வரலாற்றுக் கண்ணோட்டத்தில் தரவுப் புரட்சியை ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம். தகவலின் வரலாறு மற்றும் தொன்மைப் பொருள்கள் பற்றிய ஆராய்ச்சிகளுக்கான மைய நிறுவனமாகத் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.

chart : நிரல் படம்; வரைபடம் : செங்குத்தான அல்லது கிடைமட்டமான கோடுகளாகவோ, அல்லது பட்டையாகவோ வட்டப் படமாகவோ, தரவுவை சிறுசிறு துண்டுகளாகப் பிரித்து படமாக அமைத்துக் காட்டுதல்.

chart chassis நிரல்பட அடிக்கட்டகம் : ஒர் உலோகச் சட்டம். இதன் மீது கம்பியிழுத்தல், துளைகள் மற்றும் பிற மின்னணு தொகுப்புகளைப் பொருத்த முடியும்.

chart of accounts : கணக்குகளின் நிரல்படம் : பொதுப் பேரேடு கணக்கீட்டு அமைப்பில் குறிப்பிட்ட தலைப்புகள் அல்லது கணக்குகளின் எண்ணிக்கை.

chart options : நிரல்பட விருப்பத் தேர்வுகள்.

chart recorder : நிரல்பட பதிவி : பதிவேடு வைக்கும் சாதனம். பேனாவை வலது அல்லது இடது புறமாகத் திருப்பி அடியிலிருக்கும் காகிதத்தில் வரைபடங்கள் வரைவது.

chart, system : முறைமை நிரல்படம்.

chart type : நிரல்பட வகை.

chassis : அடிக் கட்டகம்; அடிப் பகுதி : ஒரு மின்னணு சாதனத்திற்கான கம்பிகளை இணைக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ள உலோக அடிப்பாகம்.

chat : அரட்டை : கணினி வழியாக நடைபெறும் நிகழ்நேர உரையாடல். அரட்டையில் பங்குபெறும் ஒருவர் ஒரு வரியை விசைப் பலகையில் தட்டச்சு செய்து 'என்டர்' விசையை அழுத்தியதும், மறு முனையில் இன்னொருவரின் கணினித் திரையில் அச்சொற்கள் தெரியும். அதற்குரிய பதிலுரையை அவரும் தட்டச்சு செய்து அனுப்பலாம். இவ்வாறு உரையாடல் தொடரும். நிகழ் நேரச் சேவைகள் வழங்கும் கணினிப் பிணையங்களில் பெரும்பாலும் அரட்டை வசதி உண்டு. இணையத்தில் ஐஆர்சி (IRC) என்பது தொடர் அரட்டைச் சேவையாகும். தற்