பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

circulating register

253

clarion


முறை. End around shift என்றும் சொல்லப்படுகிறது.

circulating register : சுழற்சிப் பதிவகம்.

circulations : சுழற்சிகள்.

CISC architecture : சிஸ்க் கட்டுமானம் : சிக்கல் துணைத் தொகுதி கணிப்பணிக் கட்டுமானம் என்று பொருள்படும் Complex Instruction Set Computing Architecture என்பதன் குரும்பெயர்.

CIU : சிஐயு : கணினி இடைமுக அலகு எனப் பொருள்படும் Computer Interface Unit என்பதன் குறும்பெயர்.

. ck : . சிகே : இணைய தள முகவரியில், குக் தீவின் தளங்களைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

. cl : . சிஎல் : (cl) : இணைய தள முகவரியில், சிலிநாட்டுத் தளங்களைக் குறிக்கும் பெரும் புவிபிரிவுக் களப் பெயர்.

cladding : மூடுதல் : ஒளி இழைகளில், ஒளி இழை சாதனத்தின் இரண்டாவது அடுக்கு, ஒளி அலையை அந்த சாதனத்தின் மையப் பகுதிக்கு அனுப்பும் முறை.

clamping ring : பிடிக்கும் வளையம் : வளையத்திற்குள் நெகிழ் வட்டைத் தள்ளிவிடும் 5. 25" நெகிழ்வட்டு இயக்கக் மையக் கூம்பின் ஒரு பகுதியாகவே இது இருக்கும்.

clari newsgroups : கிளாரி செய்திக் குழுக்கள் : இணையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு முக்கிய செய்திக்குழு. கிளாரி நெட் செய்திக் குழுவை தரவு தொடர்பு நிறுவனம் பராமரித்து வருகிறது. ராய்ட்டர்ஸ் (Reutuers), யுனைட்டட் பிரஸ் இன்டர்நேஷனல் ஒயர் சர்வீசஸ், ஸ்போர்ட்ஸ் டிக்கர், காமர்ஸ் பிசினஸ் டெய்லி மற்றும் பிற செய்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட செய்திக் கட்டுரைகளை இதில் காணலாம். மற்ற செய்திக் குழுக்களைப் போலன்றி, கிளாரிநெட் செய்திக் குழுவில் உறுப்பினராகக் கட்டணம் உண்டு. இச்சேவையைக் கட்டணம் செலுத்தி வாங்கியுள்ள இணையச் சேவை நிலையங்கள் மூலமாகவே இச்செய்திக் குழுவை அணுக முடியும்.

clarion : கிளாரியன் : கிளாரியன் மென்பொருள் கார்ப்பரேஷனின் பீ. சி. பயன்பாட்டு உருவாக்க மென்பொருள் Professional Development என்பதே முக்கிய தயாரிப்பு. இதில் பாஸ்கல் போன்ற