பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Claris CAD

254

classifications


நிரலாக்க மொழியும், டிபி எம்எஸ் மற்றும் புரோட்டோ டைப்பிங் ஜெனரேட்டரும் அடக்கம். Personal Developer என்பது நிரலர் அல்லாதவர்களுக்கு.

Claris CAD : கிளாரிஸ் கேட் : கிளாரிஸ் கார்ப்பரேஷனிடமிருந்து மெக்கின்டோஷ-க்காக உருவான முழுத்தன்மையுள்ள இரு பரிமாண "கேட்" மென் பொருள் பயன்படுத்துவதற்கு எளிது.

CLASS1 : கிளாஸ்1 : Computer Literacy And School Studies Project என்பதன் குறும்பெயர். இந்திய அரசின் NCERT நடத்திய திட்டப்பணி.

class2 : கிளாஸ்2 : இனக்குழு வகுப்பு : பொருள்நோக்கு நிரலாக்கத்தில், தரவுக் கூறுகளும், அவற்றை கையாளும் வழிமுறைகளும் அடங்கிய ஒரு புதிய தரவினத்தின் வரையறை, ஓர் இனக் குழுவைச் சார்ந்த இனப்பொருள்களை உருவாக்கி நிரல்களில் கையாளப்படும்.

class and objects : இனக்குழுவும் இனப் பொருட்களும்.

Class A network : ஏ-பிரிவு பிணையம் : 16, 777, 215 புரவன் (Host) கணினிகள் வரை இணைக்கத்தக்க ஒர் இணையப் பிணையம். ஏ-பிரிவு பிணையங்கள், ஒரு பிணையத்தை அடையாளங்குறிக்க ஐபி (IP) முகவரியின் முதல் எண்மியைப் (பைட்) பயன்படுத்திக் கொள்கிறது. முதல் துண்மியை (பிட்) சுழியாக (0) மாற்றி விடும். புரவன் கணினி கடைசி மூன்று எண்மிகளால் குறிக்கப்படும். ஏ-பிரிவு முகவரியிடல் தற்போது 128 பிணையங்கள்வரை ஏற்றுக் கொள்கிறது. மிகச்சில பிணையங்களையும் ஆனால் அதிக எண்ணிக்கையிலான புரவன் கணினிகளையும் கொண்ட மிகப்பெரிய அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் இணைய தளங்களுக்கு ஏ-பிரிவு முகவரிமுறை ஏற்றது.

class category : இனக்குழு வகைப் பிரிவு : பொருள்நோக்கு நிரலாக்கத்தில், குறிப்பிட்ட இனக்குழுக்களின் தொகுப்பு. சில இனக்குழுக்கள் மற்றவற்றுக்கு தெரியும். மற்றவை மறைக்கப்பட்டிருக்கும்.

class hierarchy : இனக்குழுப் படிநிலை; வகுப்பு தொடர்முறை.

classic style : மரபுப் பாணி.

classifications : வகைப்படுத்துதல்கள் : கணினிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இலக்கமுறை, ஒப்புமை மற்றும் கலப்பினம்.