பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

clean boot

256

Clear key


(ஸ்விட்சிங்) மின்சுற்றுகளின் முதல் தலைமுறையை விவரிக்க பூலியன் தருக்க இயற்கணிதத்தைப் பயன்படுத்தியவர்.

clean boot : தூய‌ இயக்கம் : இயக்க முறைமையின் குறைந்த எண்ணிக்கையிலான கோப்புகளின் துணைகொண்டு கணினியை இயக்கி வைக்கும் முறை. கணினிச் செயல்பாட்டில் ஏற்பட்ட பழுதினைக் கண்டறிய இம்முறை பயன்படுகிறது. கணினியில் செயல்படுத்திய ஒரு குறிப்பிட்ட மென்பொருளின் காரணமாகத்தான் சிக்கல் ஏற்பட்டது என்பதைப் பிரித்தறிய முடியும்.

cleaning disk : தூய்மை வட்டு.

clean install : தூய நிறுவுகை; முழு நிறுவுகை : கணினியில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள ஒரு மென்பொருளை மீண்டும் நிறுவும்போது, முன்பே நிறுவப்பட்டுள்ள கோப்புகளை நிறுவாமல் விட்டுவிடும். ஒரு மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் நேரும்போது, இவ்வாறு மறு நிறுவுகை செய்வது பயன் தராது. முன்னால் நிறுவிய போது இருந்த பயன்பாட்டு அல்லது முறைமைக் கோப்புகள் எதுவும் இல்லாத வகையில் மறுநிறுவுகை செய்ய வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட மென்பொருளினால் ஏற்பட்ட சிக்கல் தீர வாய்ப்புண்டு.

clear room : தூய்மையான அறை : கணினிக் கருவியை உற்பத்தி செய்யப் பயன்படும் பகுதி. இதில் நுழைவதற்குக் கட்டுப்பாடு, சுகாதாரத்திற்குத் தனிக்கவனம், சிறப்பு குளுகுளு வசதி, காற்றைத் துய்மைப்படுத்தும் அமைப்பு போன்றவை அமைந்திருக்கும்.

clear : அழி; துடை : காட்சித் திரையில் உள்ளவற்றைத் துடைக்கும் விசைப் பலகையின் பணி.

clear/delete/remove : அழி/நீக்கு/அகற்று.

clear down : துடைத்தெறி.

clearing : துடைத்தல்; அழிதல்; நீக்குதல் : பதிவகம், சேமிப்பிடம், அல்லது சேமிப்பு அலகுகளில் உள்ள தகவலை வெளியேற்றி பூஜ்யங்கள் அல்லது வெற்றிடங்களால் நிரப்புதல்.

Clear key : துடைக்கும் விசை; விலக்கு விசை : சில விசைப் பகுதிகளில் எண்முறை விசைப் பலகையின் மேல்பக்க இடது மூலையில் உள்ள விசை. நடப்பில் தெரிவு செய்த