பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

client application

258

client side image


மென்பொருளுக்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வழங்கன் (server) கணினியுடன் இணைத்துக்கொண்டு செயல்படும் ஒரு கிளைக் கணினி அல்லது ஒரு வழங்கன் மென்பொருளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு செயல்படும் ஒரு கிளை அல்லது உறவு மென்பொருள் (எ. டு.) மின்னஞ்சல் கிளையன். 2. முறைமை பகுப்பாய்வுக்காக‌ (System analysis) ஒப்பந்தம் செய்யப்படும் தனி நபர் அல்லது ஒரு நிறுவனம்.

client application : கிளையன் பயன்பாட்டுத் தொகுப்பு.

client computer : கிளையன் கணினி : பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள கிளைக் கணினி.

client error : வாடிக்கையாளர் பிழை; வாடிக்கையாளர் தவறு; கிளையன் பிழை : கட்டளை ஒன்றைப் பொருள் கோள் செய்வதில் உள்ள சிரமத்தின் விளைவாக அல்லது சேய்மை புரவன் கணினியுடன் சரிவர இணைக்க இயலாமையின் விளைவாக எழும் சிக்கல்.

client/server : கிளையன் / வழங்கன் : கேட்கும் கணினி வாடிக்கையாளராகவும், கொடுக்கும் எந்திரம் வழங்குபவராகவும் உள்ள கட்டுமான அமைப்பு. வழங்கன் பயன்பாட்டுச் செயல்பாடுகளைச் செய்ய, வழங்கன் தரவுத் தளத்தை வைத்திருந்து தேவையான தரவுகளை வழங்கும். ஒன்று மற்றொன்றிலிருந்து தரவுகளைக் கேட்டுப் பெறலாம்.

client server protocol : கிளையன் / வழங்கன் நெறிமுறை : ஒரு கட்டமைப்பில் ஒரு பணி நிலையத்திற்கும் (கிளையன்) வழங்கனுக்கும் இடையே வேண்டுகோள்களுக்கான அமைப்பை வழங்கும் தரவு தொடர்பு நெறிமுறை. ஓஎஸ்ஐ (OSI) மாதிரியத்தில் 7 வது அடுக்கை இது குறிக்கும்.

client - server relationship : கிளையன்-வழங்கன் உறவுமுறை.

client-server system : கிளையன்/வழங்கன் முறைமை.

client side image maps : கிளையன் பக்க படிமப் பதிலீடுகள் : வலைத் தளப் பக்கக் கிளையன் (எ. டு வலை உலாவி) தெரிவு செய்ய உதவும் சாதனம். இதன்மூலம் ஒரு படிமத்தின் பல பகுதிகளைச் சுட்டி சொடுக்கி விருப்பத் மூலம் தேர்வின்படி பயனாளரால் தெரிவு செய்யப்பட்டவற்றைக் காட்டலாம். சின்னத்தைச்