பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

clients/server architecture

259

clipboard computer


சொடுக்கி பட்டியலில் விரும்பிய படங்களைப் பார்ப்பதை ஒத்தது. தொடக்க காலத்தில் (1993) படிமங்களை வலைத் தளத்தில் நடைமுறைப்படுத்தியது போன்று கிளையன் பக்க படிமத்தை அனுப்ப வலை வழங்கனை ஒருங்கிணைக்காது. ஆனால் செயல்பட வைக்கும். பொதுவாக பதிலீட்டு வேகத்தை மேம்படச் செய்யும்.

clients/server architecture : கிளையன்|வழங்கன் கட்டுமானம்.

clik art : கிளிக் கலை : கணினியால் உருவாக்கப்படும் ஆவணங்களில் பயன்படுத்துவதற்கும் எடுத்துக்கொள்வதற்கும் தயாராக உள்ள ஒவியங்கள் மற்றும் படங்களின் பட்டியல்.

CLIP : க்ளிப் : குறிமுறை மொழித் தரவு செயலாக்கம் எனப் பொருள்படும் Coded Language Information Processing என்பதன் குறும்பெயர். ஊடு கதிர்களை எக்ஸ்ரேயில் சேர்ப்பதற்கு கதிரியக்க மருத்துவர்கள் பயன்படுத்தும் ஒரு திட்டம்.

clip art : துணுக்குப்படம்; நறுக்குப் படம் : வெட்டிப் பயன்படுத்தக்கூடிய வரைகலைப்படம். வரைகலை மென்பொருள் பயன்பாடாக அளிக்கப்படுவது. இதில் கணினி உருவாக்கும் கலைப் பொருட்கள் உள்ளன. சான்றாக, உருவங்கள், அறிவிப்புப் படங்கள், விலங்குகள், கருத்துப் படங்கள் போன்றவை. துணுக்குப் படத்திலிருந்து ஒன்றை எடுத்து பின்னர் பயன்படுத்துவதற்காக நகல் எடுக்கலாம்.

clipboard : இடைநிலைப் பலகை; துணுக்குப் பலகை; நறுக்குப் பலகை : ஒரு கோப்பிலிருந்து மற்றொரு கோப்புக்கு மாற்றி அனுப்பப்படும் தரவுகளைச் சேமித்து வைப்பதற்காகவென்றே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள கணினியின் நினைவகத்தில் உள்ள பகுதி.

clipboard computer : பிடிப்புப் பலகைக் கணினி : எந்த இடத்துக்கும் எடுத்துச் செல்லக் கூடிய கணிணி. தோற்றத்திலும் செயல்பாட்டிலும் மரபுமுறைப் பிடிப்புப் பலகையை ஒத்தது. பிடிப்புப் பலகைக் கணினியில் நீர்மப் படிகக் காட்சித்திரை (LCD) உள்ளிட்டுச் சாதனத்துக்குப் பதிலாக ஒரு பேனா இருக்கும். பயனாளர் பேனாவைத் தொட்டுச் செயல்படுத்துவர். பிடிப்புப் பலகையில் பதிவான தரவு கம்பி வடம் அல்லது இணக்கியின் வழியாக வேறு கணினிக்கு மாற்றப்படுகிறது. மரபுமுறைப் பிடிப்புப் பலகை