பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cluster

264

CMOS


பொதுவாக மையிடப்பட்ட‌ நாடா பயன்படுத்தப்படும். அச்சுப்பதிப்புமுனை நாடாவைத் தாக்கி மையைத் தாளுக்கு கொண்டு சென்று பதிய வைக்கிறது. பின் புதுமை பெறுவதற்காக நாடா சிறிது நகரும். அச்சுப்பொறியில் பொருந்துவதாக துணி நாடா சுருணையில் பொதிய வைக்கப்பட்டிருக்கும் அல்லது நாடாப் பேழையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். பல காரியங்களுக்கும் துணி நாடா போதுமானது என்றாலும், துல்லியம் வேண்டும் என்னும் போது அதற்குப் பதிலாக ஃபிலிம் நாடா பயன்படுத்தப்படும். ஆனால் ஃபிலிம் நாடா பன்முறைப் பயனுக்கு உதவாது. துணிநாடாவில் மீண்டும் மீண்டும் மை தடவிக் கொள்ளலாம். அதனால் அது பன்முறைப் பயனுக்கு உகந்தது.

cluster : கொத்து; தொகுதி : ஒரு கன்ட்ரோலர் மூலமாக பெரிய கணினி ஒன்றுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி முனையங்களின் ஒரு குழு, வட்டு பிரிவுகளில் (2 முதல் 16 வரை) ஒரே அலகாகக் கருதப்படுபவை. 30 கோப்பானது வட்டில் 2, 048 பைட் உள்ளதாக இருக்கலாம். ஆனால், வட்டு தொகுதியில் 512 பைட் பிரிவுகள் இருக்கும்.

cluster controller : கொத்து கட்டுப்படுத்தி : குறைந்த வேக சாதனங்கள் பலவற்றிலிருந்து தரவுகளைத் திரட்டும் அடிப்படைச் செயலகம். பின்னர் தொகுக்கப்பட்ட தரவுகளை ஒரு தனித் தரவு தொடர்புச் சாதனம் மூலம் அனுப்புகிறது.

clustered devices : கொத்தாக்கிய சாதனம் : ஒரு பொதுக் கட்டுப்பாட்டுக் கருவியுடன் இணைக்கப்பட்ட முனையங்களின்குழு.

clustering : கொத்தாக்கம் : ஒத்த‌ தன்மைகள் உள்ளவற்றை குழுவாக்குதல்.

. cm : . சிஎம் : இணைய தள முகவரி, கேமரூன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

CMA : Computer Aided Manufacturing என்பதன் முதலெழுத்துக் குறும் பெயர். கணினி உதவியுடன் உற்பத்தி என்பது இதன் பொருள்.

CMI : சிஎம்ஐ : கணினி வழிபடு ஆணை எனப் பொருள்படும் Computer Managed instruction என்பதன் குறும்பெயர்.

CML : சிஎம்எல் : மின்சாரப் பாங்குத் தருக்கம் எனப் பொருள்படும் Current Mode Logic என்பதன் குறும்பெயர்.

CMOS : சிமாஸ் : நிரப்புக்கூறு ஆக்ஸைடு குறை கடத்தி எனப்