பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CΜΥΚ

266

CODASYL


CMYK : சிஎம்ஒய்கே : CYAN (மயில் நீலம்), MAGENTA (செந்நீலம்) YELLOW (மஞ்சள்), BLOCK (கருப்பு) ஆகிய சொற்களின் முதல் எழுத்துகளால் உருவான குறும்பெயர் CYMK. CMY நிறமாதிரி போன்ற ஒரு நிற மாதிரி. நூறு விழுக்காடு மயில் நீலம், செந்நீலம், மஞ்சள் சேர்ப்பதைப் போலன்றி தனிக் கருப்பு நிறக் கூறுடன் சேர்ந்தால் கருப்பு நிறம் காட்டும் தன்மையது.

. cn : . சின் : ஓர் இணைய தள முகவரி, சீன நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

இணையச்சு கம்பி வடம்

. co : . சிஓ : ஓர் இணைய தள முக வரி. கொலம்பிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

coaxial cable : இணைஅச்சுக் கம்பி வடம் : அதிகவேகத்தில் தரவுகளை அனுப்ப உதவும் சிறப்பு வகை தரவு தொடர்புக் கம்பி. பொதுவாக, தொலைதூர கட்டமைப்புகளில் பயன்படுத்தப்படுவது.

COBOL : கோபால் : Common Business Oriented Language என்பதன் குறும் பெயர். பொது வணிகச் சார்பு மொழி என்பதன் சுருக்கப்பெயர். ஒரு உயர் நிலைக்கணினி மொழி. வணிகத் துறை பயன்பாடுகளுக்காக என்றே உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கோபால் நிரல்களும் நான்கு பிரிவுகளைக் கொண்டது.

: (1) Identification Division.
: (2) Environment Division.
: (3) Data Division.
: (4) Procedure Division.

அமெரிக்க இராணுவத்துறைக்காக 1959ஆம் ஆண்டு கோபால் மொழி உருவாக்கப்பட்டது.

cobweb site : ஒற்றடைத் தளம் : அநேக நாட்களாகப் பழக்கத்தில் இல்லாதுபோன ஒரு வலைத் தளம்.

cocktail party : கலக்கல் விருந்து.

CODASYL : கோடாசில் : தரவு முறைமை மற்றும் மொழிகளுக்கான கருத்தரங்கு எனப் பொருள்படும் Conference On DAta SYstem and Languages என்பதன் குறும்பெயர்.