பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

collaborative filtering

271

collating sort


ஏற்பட்டு, அதில் ஏற்கெனவே சேமிக்கப்பட்டவை பயனற்றுப் போன பின் மீண்டும் தொடங்குதல். தவறு ஏற்பட்ட பின் கணினியை மீண்டும் சாதாரணமாகத் துவங்கினால் அதில் உள்ள தரவுகளும், நிரல்களும் நினைவகத்திலிருந்து அழிந்து போயிருக்கும். இதில் மீண்டும் நிரலையும், தரவுகளையும் ஏற்ற வேண்டும்.

collaborative filtering : இணைந்து வடிகட்டல்; உடனுழை வடிகட்டல் : பலருடைய பட்டறிவுகளிலிருந்தும், கருத்துகளிலிருந்தும் தரவு பெறும் ஒருவழி. ஜெராக்ஸ் பார்க்கில் டெலிக் டெர்ரி என்பவரால் இந்தக் கலைச் சொல் உண்டாக்கப்பட்டது. ஆவணங்களைப் படித்துக் கொண்டு வரும் போதே, பயன்படுத்துபவர்கள் அவ்வப்போது விளக்க உரை குறித்துக் கொண்டு வரும் நுட்பத்தை முதலில் அவர்தான் பயன் படுத்தினார். தவிரவும், உள்ளடக்கம் பொறுத்து மட்டுமின்றி மற்றவர்கள் என்ன எழுதி யிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் அடுத்து எந்த ஆவணங்களைப் படிக்கலாம் என்பதைத் தெரிவு செய்ய முடியும். இணைந்து வடிகட்டுதலின் சாதாரண பயன்பாடு என்னவென்றால் குறிப்பிட்ட மக்களுக்கு விருப்பமான உலகளாவிய வலைத்தளங்களின் பட்டியலை உண்டாக்குவதாகும். பலருடைய அனுபவங்களை எழுத்தில் கொணர்ந்து சுவையான வலைத் தளங்களின் பட்டியலை வடிகட்டும் முறையில் உருவாக்க முடியும். அங்காடி ஆராய்ச்சிக்கான கருவியாக இணைந்து வடிகட்டுதலைப் பயன்படுத்துகிறார்கள். உற்பத்திப் பொருள்கள் பற்றிய கருத்துகள், மதிப்பீடுகள் ஆகியவை கொண்ட தரவுத் தளம் ஏற்படுத்தி, தரவுத் தளத்திலுள்ள கருத்துகளை வைத்து எந்தப் புது உற்பத்திப் பொருளை மக்கள் விரும்பி வாங்குவார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் முன் கூட்டிக் கூற இயலும்.

Collate : அடுக்கு; சேர் : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரிசைப்படுத்தப்பட்ட தரவு தொகுப்புகளை ஒன்று சேர்த்து ஒரே வரிசையில் உள்ள தொகுதியாக மாற்றுதல்.

collating sort : சேர்க்கும் வரிசையாக்கம் : தரவுகளைத் தொடர்ச்சியாக ஒன்று சேர்த்து ஒரே வரிசையாக உருவாகும் வரை சேர்க்கும் முறை.