பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

command driven

281

command line


யின் தலையாய கோப்பு. அகக்கட்டளைகளை இதுவே நிறைவேற்றி வைக்கிறது.

command driven : கட்டளை முடுக்கம் : தட்டச்சு செய்த சொற்றொடர்களாக கட்டளைகளை ஏற்றுக்கொள்ளும் நிரல் தொடர். பொதுவாக, இதைக் கற்றுக்கொள்வது அரிது. ஆயினும் பட்டியல் செலுத்து நிரலைவிட அதிக நெகிழ்வுத் தன்மையைத் தரும்.

command driven software : கட்டளையால் முடுக்க மென்பொருள் : முனையத்தைப் பயன்படுத்துவோருக்குப் பட்டிகள் (Menus) மூலம் வழிகாட்ட எந்த முயற்சியும் செய்யாத நிரல்கள். அதற்குப் பதிலாக, கட்டளையால் இயங்கும் மென்பொருளில் எத்தகைய கட்டளை உள்ளது என்றும், அவற்றில் எது பொருத்தமானது என்றும் அறிந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

command driven system : கட்டளையால் இயங்கும் முறைமை : கட்டுப்பாட்டு முனையத்திலிருந்து நுழைந்த ஆணையைக் கொண்டு பயனாளர் செயற்பாடுகளைத் தொடங்குகிற ஒர் அமைப்பு.

command file : கட்டளைக் கோப்பு : ஆணைக் கோப்பு.

command interpreter : கட்டளை பெயர்ப்பி; ஆணை பெயர்ப்பி; கட்டளை வரிமாற்றி : சாதாரணமாக இது இயக்க முறைமையின் பகுதியாக இருக்கும். விசைப் பலகையிலிருந்து தட்டச்சான கட்டளைகளை ஏற்று அதில் சொன்னபடி வேலைகளைச் செய்து முடிக்கும். ஆணை பெயர்ப்பி பயன்பாட்டுத் தொகுப்புகளை இயக்கவும், பயன்பாடு தொடர்பான தரவுகள் செல்வதை வழிப்படுத்தவும் செய்கிறது. ஓ. எஸ்/2 மற்றும் எம்எஸ்-டாஸில் கட்டளை பெயர்ப்பி, கோப்புகளை நகர்த்தவும், படி எடுக்கவும், நீக்கவும், கோப்பகத் தரவுகளைக் காட்டவும் செய்கிறது.

Command key : கட்டளை விசை : குறிப்பிட்ட பணிகளைச் செய்ய பயன்படுத்தும் விசைப் பலகையில் உள்ள ஒரு விசை.

command language : கட்டளை மொழி : ஆணை பெயர்ப்பி அமைப்பால் சரியானவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட சொற்களும் சொற்கோவைகளும் கொண்ட தொகுதி.

command line : கட்டளை வரி : இயக்க முறைமையினால் (Operating System) கட்டளை