பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

command line arguments

282

command set


செயல்படுத்தும் நுழைவு. டாஸில் C : \> யூனிக்ஸில் அடையாளத்துக்குப் பின் உள்ளீடு செய்யப்படும் கட்டளை வரியைக் குறிக்கிறது.

command line arguments : கட்டளை வரி உள்ளீடுகள்.

command line interface : கட்டளை வரி இடைமுகம் : இயக்க முறைமைக்கும் பயனாளருக்கும் இடையே உள்ள ஒருவித இடைமுகம். பயனாளர் அதில் ஆணைகளை ஒரு தனி வகை ஆணை மொழியைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்வார். கட்டளைவரி இடைமுகம் கற்றுக் கொள்வதற்குக் கடினமானது என்று கருதப்படுவது வழக்கமென்றாலும், ஆணை அடிப்படை கொண்ட அமைப்புகள் செயல்முறைப்படுத்தத்தக்கவை. செயல்முறைப்படுத்தும் இடைமுகம் அற்ற வரைகலை அடிப்படை கொண்ட அமைப்பில் இல்லாத நெகிழ்வு கிடைக்கிறது.

command line operating system : கட்டளைவரி இயக்க முறைமை.

command line parameters : கட்டளை வரி அளப்புருக்கள் : ஒரு கட்டளையில் சேர்க்கப்படும் கூடுதல் உள்ளீடுகள். டாஸ் அல்லது யூனிக்ஸில் பிராம்ப்டிலிருந்து ஒரு நிரலை இயக்கக் கட்டளை தரும் போது, அந்த நிரலுக்குத் தரப்படும் உள்ளீட்டுத் தரவுகள்.

command line user interface : கட்டளைவரி பயனாளர் இடை முகம்.

command mode : கட்டளை பாங்கு : செயல்படுத்தப்படுவதற்கான கட்டளைகளை கணினியை ஏற்றுக்கொள்ளச் செய்யும் இயக்க பாங்கு.

command path : கட்டளை வழி.

command processing : கட்டளைச் செயலாக்கம் : கணினி ஆணைகளைப் படித்தல், ஆராய்தல் மற்றும் செயல்படுத்தல்.

command processor : கட்டளைச் செயலி : ஒரு இயக்க முறைமையின் மிக எளிமையான கட்டளைகளை அறிந்து கொள்ளப் பயன்படும் ஒரு பொதுவான கட்டளைக் கோப்பு.

command prompt : கட்டளை தூண்டி.

command queuing : கட்டளைச் சாரை : பல கட்டளைகளைச் சேமித்து அவற்றை ஒவ்வொன்றாகச் செயல்படுத்தும் திறன்.

command Set : கட்டளைத் தொகுதி : ஆணைத்தொகுதி (Instruction set) போன்றது.