பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

commercial data processing

284

Common Client Interface


பெறலாம். நெட்ஸ்கேப், மைக்ரோசாஃப்ட், குவார்ட்டர்டெக்ட் போன்றவை உள்ளடங்கலாக‌ அநேக கம்பெனிகள் வணிக வழங்கன்களை விற்பனை செய்கின்றன.

commercial data processing : வணிகத் தரவு செயலாக்கம்.

Commercial Internet Exchange : வணிக இணைய இணைப்பகம் : பொதுமக்களுக்கு இணைய சேவை அளிக்கும் இலாப நோக்கமில்லாத வணிக அமை வனம். வழக்கமான பிறர் சார்பான நடவடிக்கைகள், சமூக நடவடிக்கைகள் ஆகியவற்றோடுகூட அதன் உறுப்பினர்களுக்கு இணைய இணைப்பு வசதியையும் அளிக்கிறது.

Commercial software : வணிக மென்பொருள்.

commission : தரகுத் தொகை.

Common Access Method : பொது அணுகு வழிமுறை : ஃபியூச்சர் டொமைன் நிறுவனம் மற்றும் ஏனைய ஸ்கஸ்ஸி வணிக நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய தர வரையறை. எப்படிப்பட்ட வன்பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஸ்கஸ்ஸி தகவிகள் (adapters) ஸ்கஸ்ஸி சாதனங்களுடன் தரவு பரிமாற்றத்தைச் சாத்தியம் ஆக்குகின்ற பொது அணுகு வழிமுறை இதுவாகும்.

common applications environment (CAE) : பொதுப் பயன்பாட்டுச் சூழல்.

common area : பொது இடம் : தலைமை நினைவகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ஒரு இடம். ஒரே நிரலின் பல பகுதிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ளும்.

common business oriented language : பொது வணிகம் சார்ந்த மொழி : கோபால் (COBOL) மொழியின் விரிவாக்கப் பெயர்.

Common Carriers : காமன் கேரியர்ஸ் : பொது மக்களின் பயன்பாட்டுக்காக தொலைபேசி, தந்தி மற்றும் பிற தரவு தொடர்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் அரசு வழி காட்டலில் இயங்கும் தனியார் நிறுவனம்.

Common Client Interface : பொது கிளையன் இடைமுகம் : என்சிஎஸ்ஏ நிறுவனத் தயாரிப்பான மொசைக் மென்பொருளின் எக்ஸ்-விண்டோஸ் பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கட்டுப்பாட்டு இடைமுகம். ஒரு வலை உலாவியின் உள்ளக நகலை வேறு நிரல்கள் கட்டுப்படுத்த முடியும். என்சிஎஸ்ஏ