பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

common storage

286

communication channel


தரப்படுத்தப்பட்ட பதிப்பு. லிஸ்ப் மொழியை எந்த நிறுவனமும் தம் சொந்த வடிவில் வெளியிட முடியும். இதன் காரணமாய் லிஸ்ப் மொழி வெவ்வேறு வடிவில் வெளியிடப்பட்டது. எனவே அம்மொழியைத் தரப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. தரப் படுத்தப்பட்ட பொது லிஸ்ப் மொழி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் லிஸ்ப் நிரலர்களுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட மூலமொழி கிடைத்தது.

common storage : பொது சேமிப்பகம் : எல்லா நிரல்களும் அணுகக்கூடிய தரவு அல்லது அளவுகோல்களை வைத்துக் கொண்டிருக்கும் நினைவகத்தின் பகுதி.

common storage area : பொதுச் சேமிப்பகப் பரப்பு.

Common User Access : பொதுப் பயனர் அணுக்கம் : ஐபிஎம் நிறுவனத்தின் முறைமைப் பயன்பாட்டுக் கட்டுமானத்தில் ஒரு பகுதியாக, பயனாளர் இடை முகங்களை மேலாண்மை செய்வதற்கான தர வரையறைகளின் தொகுதி. வெவ்வேறு பணித் தளங்களில் ஒத்தியல்பாகவும் முரணின்றியும் செயல்படக் கூடிய பயன்பாடுகளை உருவாக்க உதவுவதற்கென இந்தப் பொதுப்பயனாளர் அணுக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

communicating : தரவு தொடர்பு கொள்ளல் : பயன் படுத்தும் இடம் ஒன்றுக்கு தகவலை அனுப்பும் செயல்முறை.

communicating word processors : தரவு தொடர்பளிக்கும் சொல் செயலிகள் : மின்னணு அஞ்சலை அனுப்பப் பயன் படுத்தப்படும் சொல் செயலிகளின் கட்டமைப்பு.

communication : தரவு தொடர்பு : 1. ஒரு இடத்திலிருந்து (மூலம்) வேறொரு இடத்துக்கு (சேரிடம்) தரவு செல்லுதல். 2. அனுப்புதல் அல்லது தெரியப்படுத்தல். 3. பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சமிக்கைகளின் தொகுதியைப் பயன்படுத்த தனிநபர்களுக்கிடையே தரவு மாற்றிக் கொள்ளும் செயல் முறை.

communication channel : தரவு தொடர்பு வழித்தடம் : தரவுகளை அனுப்புதல் அல்லது பெறுவதற்காக ஒரு இடம் அல்லது சாதனத்தினை வேறொன்றுடன் இணைக்கும் பருநிலை வழி. தரவு தொடர்பு வழித்தடங்களாக இணையச்சு வடம், ஒளிவ நுண் இழைகள், நுண்ணலை சமிக்கைகள்,