பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

communications system

289

compact disc


யில் பூமியின் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள். நுண்ணலை பரப்பும் நிலையமாக அது செயல்படும். தரை நிலையத்திலிருந்து அனுப்பப்படும் சமிக்கைகளை ஏற்று, அவற்றின் திறன்பெருக்கி வெவ்வேறு அலைவரிசைகளில் பூமியிலுள்ள இன்னொரு தரை நிலையத்துக்கு அனுப்பி வைக்கும். தொடக்க காலங்களில் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைகளுக்காகவே இத்தகைய தரவு தொடர்பு செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்பட்டன. கணினி தரவுகளின் அதிவேக பரப்புகைக்கும் பயன்படுத்த முடியும். ஆனால் இரண்டு இடையூறுகள் உள்ளன. ஒன்று, அலைபரவலில் ஏற்படும் தாமதம் (சமிக்கைகள் நீண்ட தொலைவு பயணம் செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தினால் ஏற்படும் தாமதம்). இரண்டாவது தரவு பாதுகாப்பு.

communications system : தகவல் தொடர்பு அமைப்பு : தகவல் அனுப்புகின்றவரின் பருப்பொருள், வழித்தடங்கள் மற்றும் தரவு பெறுபவர்களையும் கொண்ட அமைப்பு.

communication standard : தரவுத் தொடர்புத் தரம்; செய்தித்தொடர்பு செந்தரம்; செய்தித் தொடர்பு திட்ட அளவு.

Communications Terminal Protocol : தகவல் தொடர்பு முனைய நெறிமுறை : ஒரு பயனாளர் தன்னுடைய கணினியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள ஒரு கணினியை, அதனுடன் நேரடியாக இணைக்கப்பட்ட ஒரு கணினியைப் போலவே அணுக வழி செய்யும் முனைய நெறிமுறை இது.

Community Antenna Televisions (CATV) : சமுதாய அலைவங்கித் தொலைக்காட்சி.

compact : குறு; குறுக்கி; கச்சிதம்.

compact database : தரவு தளத்தை இறுக்கு.

compact disc : குறுவட்டு : 1. தொடக்க காலங்களில், கேட்பொலி (audio) தகவலை இலக்க முறை (digital) வடிவில் பதிந்து வைப்பதற்கான ஒரு ஒளியியல் சேமிப்பு ஊடகமாக அறிமுகம் ஆனது. இது மின்காந்த வட்டுகளிலிருந்து வேறுபட்டது. பள பளப்பான உலோகப் பூச்சும் பாதுகாப்பான பிளாஸ்டிக் மேல் பூச்சும் கொண்டது. 74 நிமிடங்கள் கேட்கக்கூடிய உயர்தர ஒலித் தகவலைப் பதிய முடியும். மிகு அடர்த்தியுள்ள


19