பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

compression

299

computer


விட இது வேகமாகச் செயல்படுகிறது.

compression : இறுக்குதல்; இறுக்கம்.

compression algorithm : இறுக்கப் படி முறை.

compression ratio : இறுக்கு வீதம் : இறுக்கப்பட்ட தரவுகளை அளப்பது. சான்றாக, அதன் மூல அளவின் கால் பங்காக இறுக்கினால் அதை 4 : 1, 25%, 75% என்று குறிப்பிடலாம்.

compression technique : இறுக்கிச் சுருக்கும் நுட்பம்.

compressor : இறுக்கி; செறிவி; சுருக்கி : மிகவும் வலுவானதும் மிகவும் பலவீனமானதுமான அனுப்பும் சமிக்கைகளின் எல்லையைச் சுருக்கும் சாதனம். தரவுகளைச் சுருக்கும் நிரல் அல்லது நடைமுறை ஒழுங்கு.

CompuServe : கம்ப்யூசெர்வ் : தனிநபர்கள் மற்றும் வணிகத் துறையினர் பயன்படுத்தும் பெரிய தகவல் சேவை கட்டமைப்பு, புதிய செய்திக் கட்டுரைகள், பங்குச் சந்தை அறிக்கைகள், மின் அஞ்சல், கல்வி நிரல்கள், நிரலாக்க உதவிச் சாதனங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. பொது தொலைபேசி அமைப்பு மூலம் சொந்தக் கணினி வைத்திருப்போர் 'கம்ப்யூசெர்வ்'யுடன் தொடர்பு கொள்ளலாம்.

computability : கணக்கிடும் தன்மை : கணக்கு முறையில் சிக்கல்களைத் தீர்க்கும் பொருள்.

computation : கணக்கிடல் : கணக்கிடுவதன் விளைவு.

computational complexity : கணக்கிடல் உட்சிக்கல் நிலை.

computational linguistics : கணினி மொழியியல்.

computational stylistics : கணினி நடையியல்.

compute : கணக்கிடு; கணி.

compute bound : கணக்கிடும் வரையறை : மையச் செயலகத்தின் வேகத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட கணினி அமைப்பின் ஒரு நிரலாகக் குறிப்பிடுவது. கட்டுப்படுத்தும் செயல்முறை அல்லது செயலக வரையறை என்பதைப் போன்றது. உள்ளீடு : வெளியீடு வரையறை என்பதற்கு மாறானது.

computer : கணினி; கணிப் பொறி : தரவுகளை ஏற்றுக் கொண்டு அத்தரவுகளின்மீது குறிப்பிட்ட செயல்முறை (கணித அல்லது தருக்க முறை) களை நிகழ்த்தி அச்செயல்முறை