பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Computer Aided Manufacturing

301

computer application'


மையங்களின் தேவைக்கேற்ப புதிய பொருள்களுக்கு ஆணையிடுதல் போன்றவற்றில் துல்லியமான கணக்கு வைத்திருக்க, கணினி மூலம் செயல்படும், உற்பத்தி மேலாண்மை அமைப்பு.

Computer Aided Manufacturing (CAM) : கணினி உதவிடும் உற்பத்தி முறை (கம்) : உற்பத்தித் துறையைச் சேர்ந்த மேலாண்மை, கட்டுப்பாடு, செயல்முறை ஆகியவற்றுக்கு கணினித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல்.

Computer Aided Materials Delivery : கணினி உதவிடும் பொருள் விநியோகம் : ' கணினி இயக்கத்தில் நகர்த்திப் பட்டைகளையும், எந்திரன் (எந்திர மனித) வண்டிகளையும் பயன்படுத்தித் தொழிற்சாலையிலிருந்து பொருள்களையும் உதிரி பாகங்களையும் நகர்த்துதல். இதன் மூலம் உற்பத்தித் திறன் அதிகரித்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் கூடுகிறது.

Computer Aided Materials Selection : கணினி உதவிடும் பொருள் தேர்வு : ஒரு புதிய பொருள் அல்லது உதிரிபாகத்தை உருவாக்க எந்தெந்த பொருள்களைப் பயன்படுத்தலாம் என்பதை முடிவுசெய்ய கணினியைப் பயன்படுத்துதல்.

Computer-Aided Planning (CAF) : கணினி-உதவிடும் திட்டமிடல் : திட்டமிடல் செயல்முறைக்கு உதவ கணினி மென்பொருள்களை கருவிகளாகப் பயன்படுத்துதல்.

Computer - Aided Software Engineering (CASE) : கணினி உதவிடும் மென்பொருள் பொறியியல் : மென்பொருள் உருவாக்கம் அல்லது நிரலாக்கம் உள்ளிட்ட தரவு அமைப்பு வளர்ச்சியில் பல்வேறு நிலைகளைத் தானியங்கியாகச் செய்ய மென்பொருள் தொகுப்பைப் பயன்படுத்துவது.

computer, all purpose : அனைத்துப் பயன் கணினி.

computer, anolog : ஒத்திசைக் கணினி, தொடர்முறை கணினி.

computer anxiety : கணினி பதட்டம் : கணினிகள் பற்றிய அச்சம்.

computer application : க‌ணினிப் பயன்பாடு : இறுதி பயனாளர் ஒரு குறிப்பிட்ட வேலைக்கோ அல்லது ஒன்றைச் சாதிக்கவோ, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைத் தீர்க்கவோ கணினியைப் பயன்படுத்துவது. சான்றாக,