பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

computer kit

310

computer museum


computer kit : கணினி கருவிப்பெட்டி : கருவிப்பெட்டி வடிவில் நுண்கணினி, கணினி கருவிப் பெட்டியை வாங்குபவர்கள், மாதிரி விமானத்தையோ அல்லது ஸ்டீரியோ ஒலி அமைப்பையோ உருவாக்குவது போல், நுண்கணியை உருவாக்க முடியும், பள்ளிகளில் கணினி வடிவமைப்பு சொல்லித் தருவதற்கும், கணினி பொழுது போக்கினை பழக்கமாகக் கொண்டவர்களுக்கும் கணினி கருவிப்பெட்டி புகழ் பெற்று விளங்குகிறது.

computer language : கணினி மொழி : ஒரு கணினியில் செயல் படுத்துவதற்கான ஆணைகளைக் கொண்டுள்ள ஒரு செயற்கை மொழி. இருமக் குறிமுறை மொழி தொடங்கி உயர்நிலை மொழிகள்வரை மிகப்பரந்த தொகுதியை இச்சொல் குறிக்கிறது.

computer leasing company : கணினியை வாடகைக்குத் தரும் நிறுவனம் : கணினி உற்பத்தியாளரிடமிருந்து வாங்கிய கணினிக் கருவியை வாடகைக்கு விடுவதில் சிறப்பாக ஈடுபட்டுள்ள நிறுவனம்.

computer letter : கணினி எழுத்து : ஒரு சொல் செயலி பொருள். உருவாக்கும் தனிப்பட்ட எழுத்து வடிவம்.

computer literacy : கணினி எழுத்தறிவு : சிக்கல்களைத் தீர்க்க கணினிகளைப் பயன்படுத்துவது என்ற பொது அறிவும், வன்பொருள் மற்றும் மென்பொருளின் செயல்பாடு பற்றிய பொதுவிழிப்புணர்வும், கணினிகளால் ஏற்படும் சமுதாய மாற்றங்கள் பற்றிப் புரிந்து கொள்ளுதலும் சேர்ந்தது. இவ்வறிவு கணினி சார்ந்த சமுதாயத்தில் வாழ்வது பற்றிய புரிந்து கொள்ளுதல்களையும், அறிவுக் கருவிகளையும் உருவாக்கி உள்ளது. தொழில்நுட்ப அறிவு கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கணினி சூழ்நிலையில் ஒரு பயனாளராக இயல்பாக செயல்படமுடிவதே கணினி எழுத்தறிவு பெற்றிருப்பதாகும்.

Computer Managed instruction (CML) : (சிஎம்எல்) பதிவேடு காக்கும் மேலாளராகவும், கற்றுத் தருவதை வரையறுப்பவராகவும் கணினியைப் பயன்படுத்துவது. கல்விக்காக கணினிகளைப் பயன்படுத்தல்.

computer museum : கணினி கண்காட்சி : அமெரிக்காவில் மசாசூசெட்சின் போஸ்டனில் உள்ள கணினி வரலாறு