பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

computer science

314

computer, special purpose


தனியாள் பயன்படுத்தும் சொந்தக் கணினிகளின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. சமூக வாழ்வில் இவற்றின் தாக்கம் புரட்சிகரமானது என்று தான் கூறவேண்டும். கணினியின் வேகம், துல்லியம், சேமிப்புத்திறன் ஆகியவை தகவல் சேமிப்பு, செயலாக்கம் மற்றும் பரிமாற்றத்தில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

computer science : கணினி அறிவியல் : கணினிகளை வடிவமைத்து பயன்படுத்துவது பற்றிய அனைத்து நுட்பங்களையும் உள்ளடக்கிய அறிவுப் புலம். பல கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்பாக அளிக்கப்படுகிறது.

computer, scientific : அறிவியல் கணினி.

computer security : கணினிப் பாதுகாப்பு : அனுமதியில்லாமல் பயன்படுத்துவதையும், தவறாகப் பயன்படுத்துவதையும் தடுத்து கணினி மூலாதாரங்களைப் பாதுகாப்பது. தற்செயலான அல்லது வேண்டுமென்றே ஏற்படும் சேதம், மாற்றம், வெளியிடல் போன்றவற்றிலிருந்து தரவுகளைப் பாதுகாப்பது.

computer select : கணினித் தேர்வு : கணினி நூலகத்திலிருந்து சிடிரோம் சேவை. இது முழுச் செய்திக் கட்டுரைகளும், சுருக்கங்களும் 250-க்கும் மேற்பட்ட கணினி தொடர்பான பருவ இதழ்களிலிருந்து வழங்குகிறது.

computer services : கணினிச் சேவைககள் : தரவு செயலாக்கம், காலப்பங்கீடு, தொகுதி செயலாக்கம், மென்பொருள் உருவாக்கம் மற்றும் ஆலோசனைப் பணிகள்.

computer services company : கணினிச் சேவைகள் நிறுவனம் : பிற தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் கணினிச் சேவைகளை அளிக்கும் நிறுவனம்.

computer simulation : கணினி பாவிப்பு : உண்மையான அல்லது கற்பனையான அமைப்பைக் குறிப்பிடுதல்; கணினி நிரலில் உருவாக்கப்படுவது.

computer specialist : கணினி வல்லுநர் : ஒரு தனிப்பட்ட ஒப்பந்தக்காரராகவோ அல்லது ஆலோசகராகவோ கணினியைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு கணினி சேவைகளை அளிக்கும் ஒரு நிரலர் அல்லது அமைப்பை ஆராய்பவர் போன்ற ஒரு தனி நபர்.

computer, special purpose : சிறப்புப் பயன் கணினி.