பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Constant Linear Velocity

327

contact



வரை அதன் ஒட்டுமொத்த மதிப்பு மாறாது.

Constant Linear Velocity (CLV) : மாறா நேர் வேகம்.

constants and variables : மாறிலிகளும் மாறிகளும்.

constellation : கொத்து திறன் தகவல் தொடர்பு அமைப்பில் சுமப்பி அலைகளின் (carrier wave) வெவ்வேறு நிலைகளை உருவகிக்கும் ஒரு தோரணி (pattern) அமைப்பு. ஒவ்வொரு நிலையும் ஒரு குறிப்பிட்ட துண்மி சேர்க்கைகளைக் கொண் டிருக்கும். ஒரு தகவல் தொடர்பு சமிக்கையில் ஏற்படும், தனித் துக் காட்டக்கூடிய ஒவ்வொரு மாற்றத்தையும் அடையாளம் காட்டும் நிலைகளின் எண்ணிக் கையை இத் திரள் அறியலாம். எனவே, ஒற்றை மாற்றத்தில் அதிகப்பட்சமாக குறி முறைப்படுத்த வேண்டிய துண்மிகளின் எண்ணிக்கையை இது காட்டும்.

constraint : நிபந்தனை ஒரு சிக்கலுக்கான தீர்வுகளை கட்டுப்படுத்தும் நிபந்தனை.

construct : கட்டு கட்டமை உருவாக்கு.

constructor : ஆக்கி பொருளாக்கி பொருள்நோக்கு திரலாக்கத்தில் ஒர் இனக்குழுவில் ஒரு பொருளை உருவாக்கும் போது, அப்பொருளின் பண்புக் கூறுகளை நிர்ணயிக்கும் ஒரு செயல்கூறு அல்லது வழிமுறை. இது தானாகவே இயக்கப்படும்.

consultant ; ஆலோசகர் வணிக தரவு செயலாக்கம், கல்வி, இராணுவ அமைப்பு அல்லது நலவாழ்வு போன்ற சில பயன் பாட்டு சூழ்நிலைகளில் கணினி களைப் பயன்படுத்துவதில் வல்லுநர். ஒரு குறிப்பிட்ட சிக்கலை பரிசீலித்து தீர்ப்பதற்கு உதவுகின்றவர்.

consumable : நுகர் பொருட்கள் : வன்பொருள் துணைக் கருவி கள். அச்சுப் பொறி நாடாக்கள், மை, காகிதம் போன்று தொடர்ச்சியாக வாங்க வேண்டிய பொருள்கள்.

consumer electronics : நுகர்வோர் மின்னணுவியல். cont . கான்ட் ; பேசிக் மொழி யில் ஒரு ஆணை. தற்காலிகமாக நின்று போன நிரலை தொடரப் பயன்படுத்தப்படுவது.

contact : தொடர்பு : மின்சாரம் செல்ல அனுமதிக்கும் இனைப்புக்காக தொடர்புள்ள உலோக சுருளைத் தொடும் பொத்தான் அல்லது சாக்கெட்டில் உள்ள உலோகச் சுருள். அரிப்பைத்