பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

context sensitive help

329

continue



கட்டியைச் சொடுக்குவது போன்றவற்றால் இதனைச் செய்ய முடியும்.

context sensitive help : சூழ் நிலை உணர் உதவி உதவி கேட்கும் நேரத்தில் நிரலின் நிலை அல்லது முறை என்ன என்பது உணர்வது. அது பற்றிய குறிப்பிட்ட தரவு வழங்கும் உதவி முறை.

context sensitive help key சூழ்நிலை உணர் உதவு விசை : பல விசைப் பலகைகளில் உள்ள ஒரு முக்கிய விசை, விசைப்பலகையில் உள்ள இந்த விசையை அழுத்தும் போது குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்க உதவும் உதவி காட்சித் திரையில் தானாகத் தோன்றும். பெரும் பாலும் F1 ஆக இருக்கும்.

context sensitive language : சூழ் நிலை உணர் மொழி,

context switching : சூழ்நிலை மாற்றம் : பல்பணி இயக்க முறைமையில் ஒருவகை மையச் செயலியின் கவனத்தை ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்குத் திருப்பும் செயல் முறை. ஒவ்வொரு பணிக்கும் நேரத்தைக் கூடுதலாக்கி மாற்றி மாற்றி ஒதுக்கீடு செய்யும் முறை யிலிருந்து மாறுபட்டது.

contextual search : சூழ்நிலைத் தேடல் அவற்றில் உள்ள சொல் பகுதியின் அடிப்படையில் பதி வேடுகள் அல்லது ஆவணங் களைத் தேடுவது விசைப்புலம் அல்லது கோப்பின் பெயர்மீது தேடுவதற்கு மாறானது.

contiguous அடுத்தடுத்து ஒட்டியுள்ள பொது எல்லைக் கோட்டைக் கொண்ட அடுத் தடுத்த பகுதிகள். (எ. டு.) ஒரு வட்டில் அடுத்தடுத்த தரவு குறிப்புகள் சேமிக்கப்பட்டுள்ள வட்டுப் பிரிவுகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும் முறை.

contiguous data structure

அடுத்தடுத்துள்ள தரவுக் கட்டமைப்பு.

contingency pian : எதிர்பாரா நிலைத் திட்டம் அவசர நிலை கள் அல்லது சேதங்கள் ஏற்படும் பொழுது கணினி தரவு அமைப் பினை மீட்டுக் கொண்டு வருவதற்கான திட்டம்.

continuation card : தொடர்ச்சி அட்டை முந்தைய துளை யிட்ப அட்டையில் தொடங்கப் பட்ட தகவலைக்கொண்ட துளையிட்ட அட்டை.

continue தொடர்க . முன்பே வரையறுக்கப்பட்ட வரையறைகளுடன் பொருந்தும் பதிவேடு